அதிக விளம்பர ஆசையில் 60 பேரை கவுத்துவிட பார்த்த தி.மு.க எம்.எல்.ஏ - விளம்பர மோக அரசு என தலையில் அடித்துகொள்ளும் மக்கள்

Update: 2023-04-06 11:37 GMT

திமுக அரசின் விளம்பர மோகம் நாளுக்கு நாள் ஆபத்தை விளைவிக்கும் அளவிற்கு சென்றுகொண்டிருக்கிறது.

எதற்கெடுத்தாலும் செல்பி, எதுக்கெடுத்தாலும் விளம்பரம், எதற்கெடுத்தாலும் ஒரு வீடியோ, எதற்கெடுத்தாலும் ஒரு சமூக வலைதள ட்ரெண்டிங் என திமுகவின் விளம்பர மோகம் முதல்வர் முதல் எம்எல்ஏக்கள் வரை ஆட்டி படைத்து வருகிறது. குறிப்பாக கூற வேண்டும் என்றால் முதல்வருக்கு விளம்பரம் மிகவும் பிடிக்கும், அவர் சாப்பிடுவது, டீக்கடையில் டீ குடிப்பது, சைக்கிளில் செல்வது, உடற்பயிற்சி செய்வது, கையெழுத்து போடுவது, ஆய்வுக்கு செல்வது அனைத்துமே விளம்பரம் தான்.

இதையேதான் மற்ற அமைச்சர்களும் பின்பற்றி வருகின்றனர், அமைச்சர்கள் அவர்கள் செய்யும் திட்டத்தை விட விளம்பரம் செய்வதையே தற்பொழுது பிரதான குறிக்கோளாக வைத்து வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் எம்எல்ஏ ஒருவர் நான் பஸ் எடுப்பேன் என அடம் பிடித்துக் கொண்டு பஸ்ஸை திரும்ப தெரியாமல் பயணிகளுடன் குடை சாய்த்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிய பேருந்து வழித்தடத்தை துவக்கி வைக்க திமுக எம்எல்ஏ சி.வி.எம்.பி எழிலரசன் அழைக்கப்பட்டிருந்தார்.

அங்கு சென்ற திமுக எம்எல்ஏ கொடியை அசைத்துவிட்டு பேருந்து வழித்தடத்தை துவக்கி வைத்து விட்டு வராமல் பேருந்து நான் தான் ஓட்டுவேன் என அடம்பிடித்து கிட்டத்தட்ட 50 முதல் 60 பேரை பேருந்தில் ஏற்றுக்கொண்டு உட்கார்ந்து பேருந்து ஓட்டுகிறேன் என பந்தாவாக திருப்ப தெரியாமல் திருப்பி அந்த பஸ்ஸை கிட்டத்தட்ட குடை சாயும் அளவிற்கு கொண்டு சென்றார். நல்ல வேலையாக அந்த வழியில் யாரும் செல்லவில்லை, அவர் திரும்பிய பக்கமும் சிறிய பள்ளமாக இருந்ததால் பேருந்து சற்று சாய்ந்ததுடன் நின்றுவிட்டது.. இதுவே பெரிய பள்ளமாக இருந்து எதிரில் யாராவது வந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? இப்படி விளம்பரத்திற்கு ஆசைப்பட்டு பலர் உயிரை வாங்கும் நிலைக்கு சென்றுள்ளது திமுக எம்எல்ஏ வின் விளம்பரம் மோகம்.

இப்படியா விளம்பர பித்து பிடித்த அரசாக இருக்கும் திமுக அரசு என மக்கள் தலையில் அடித்துக்கொள்கின்றனர்.

Similar News