உக்ரைனில் உள்ள 60 சதவீத இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேறினர் - கேரள உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை

Update: 2022-03-02 10:45 GMT

உக்ரேனில் உள்ள 60 சதவீத இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் என்றும் மீதமுள்ள இந்திய குடிமக்களை மீட்பதற்கான முயற்சிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும் கேரள உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.


ரஷ்ய தாக்குதலின் தொடக்கத்தில் உக்ரேனில் சிக்கிய இந்திய மாணவர்கள் உட்பட 20 ஆயிரம் இந்தியர்களில் 60 சதவீதம் பேர் உக்ரைன் எல்லையை தாண்டியுள்ளனர் எனவும் மீதமுள்ள மக்களை மீட்கும் முயற்சியில் மத்திய அரசு விறுவிறுப்பாகவும் மற்றும் துரிதமாகவும் இயங்கி வருவதாக கேரள உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் "ஆப்ரேஷன் கங்கா" நடவடிக்கையின் கீழ் ரொமேனியா, போலந்து, ஹங்கேரி மற்றும் உக்ரைனின் அண்டை நாடுகளுக்குச் சென்றுள்ள இந்தியர்களை வெளியேற்ற வர்த்தக விமானங்கள் மட்டுமின்றி இந்திய விமானப்படை விமானங்களும் இயக்க அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.


உக்ரேனில் சிக்கித் தவிக்கும் மலையாளி மாணவர்களை பாதுகாப்பாகவும், விரைவாகவும் திரும்ப அனுப்ப கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் அதன் இரண்டு உறுப்பினர்கள் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பான விசாரணையின் பொழுது அவர்கள் தெரிவித்ததாவது உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களின் நலன் பற்றி அரசு என்ன செய்துள்ளது? என கேள்வி எழுப்பினர்.


அந்த விசாரணையின்போது மத்திய அரசு தெரிவித்துள்ளதாவது, "உக்ரைனில் உள்ள இந்தியர்களை அந்நாட்டில் இருந்து தற்காலிகமாக வெளியேற்றுமாறு பிப்ரவரி 15ஆம் தேதி முதல் வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தி வருவதாகவும் படையெடுப்பு தொடங்கிய பின்னர் அங்கு உள்ள மாணவர்களை உக்ரேனின் அருகிலுள்ள நாடுகளுக்கு செல்ல அரசு அறிவுறுத்தியது. மேலும் மீட்பு ஆலோசனைகளை தொடர்ந்துபிப்ரவரி 16 முதல் 23-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் சுமார் 4 ஆயிரம் இந்தியர்கள் வணிக விமானங்களில் இந்தியாவுக்கு திரும்பினர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


அதனைத் தொடர்ந்து மார்ச் 1ஆம் தேதி வரை 15 மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு உள்ளன எனவும், மேலும் 5,500 இந்திய பிரஜைகள் அழைத்துவர வரும் நாட்களில் 26 விமானங்கள் திட்டமிடப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'ஆபரேஷன் கங்கா'வின் கீழ் உக்ரைனின் அண்டை நாடுகளான ருமேனியா மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளில் சுமார் 6000 இந்தியக் குடிமக்கள் எல்லைகளைத் தாண்டி பாதுகாப்பாக உள்ளனர் என்றும் அவர்கள் ருமேனியா, போலந்து, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா மற்றும் மால்டோவாவில் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் அண்டை நாடுகளான ஆஸ்திரியா, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா மற்றும் போலந்து ஆகிய நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் மூலம் வெளியேற்றப்பட்டவர்களை ஏற்றுக்கொண்டு முடிந்தவரை உணவு தண்ணீர் மற்றும் தங்குமிடம் வழங்குகின்றன. இதுமட்டுமின்றி இந்திய நாட்டினரை வீட்டுக்கு அழைத்து செல்ல இந்திய மீட்பு விமானங்களை ஏற்பாடுகளை செய்து வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Source - Swarajya

Similar News