பிரதமர் மோடி கொரோனா பிரச்சனையை சிறப்பாக கையாண்டதாக 63 சதவீத மக்கள் கருத்து!

Update: 2021-06-01 09:45 GMT

மத்தியில் மோடி ஆட்சி இரண்டு ஆண்டுகள் முடிவடைந்ததை அடுத்து இது தொடர்பாக ஏபிபி தொலைக்காட்சி, சி-வோட்டர் இணைந்து கருத்து கணிப்பு நடத்தியது. அப்பொழுது கொரோனா பிரச்சனையை பிரதமர் மோடி சிறப்பாக கையாண்டதாக 63 சதவீதம் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

கடந்த ஜனவரி முதல் மே மாதம் வரை நாடு முழுவதும் மக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டன அப்பொழுது அதுகுறித்த கேள்விகளும் மக்களின் ஆதரவு குறித்த புள்ளி விவரங்களை ஏபிபி - சி - வோட்டர் வெளியிட்டது.

கொரோனா வைரஸ் பரவியபோது பிரதமர் மோடி ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலுக்காக பிரச்சாரம் செய்தது சரியாய், தவறா? என்று மக்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

நகர பகுதிகளை சேர்ந்த 34 சதவீதம் பேர் சரி என்றும் 58 சதவீதம் பேர் தவறு என்றும் கருத்து தெரிவித்தனர். கிராமங்களில் 29 சதவீதம் பேர் சரி என்றும் 61 சதவீதம் பேர் தவறு என்றும் தெரிவித்தனர். ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலை தள்ளி வைத்திருக்கலாம் என்று 60 சதவீதம் பேர் தெரிவித்தனர்.

நரேந்திர மோடி அல்லாது ராகுல் காந்தி பிரதமராக இருந்திருந்தால் கொரோனா பிரச்சனையை யாரு சிறப்பாக கையாண்டிருப்பார்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு 66 சதவீதம் பேர் நகரங்களிலும், 62 சதவீதம் பேர் கிராமங்களிலும் மோடி சிறப்பாக கையாண்டார் என்று தெரிவித்துள்ளனர். அதாவது சராசரியாக 63 சதவீதம் பேர் நரேந்திர மோடி கொரோனா பிரச்னையை சிறப்பாக கையாண்டார் என்று மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News