'விஜய் 66' படத்திற்கு இசை பி.ஜி.எம் கிங் யுவனா?

Update: 2021-12-25 09:30 GMT

விஜய்'யின் அடுத்த படத்தில் இசையமைப்பாளராக யுவன் இணைவார் என்ற தகவல் பரவி வருகிறது.




 


2003'ல் வெளிவந்த புதிய கீதை என்ற விஜய் படத்திற்கு யுவன் சங்கர் ராஜாதான் இசை. விஜய் நடிக்க யுவன் இசையமைத்த ஒரே படம் புதிய கீதை மட்டுமே. அதன் பிறகு விஜய் படத்திற்கு யுவன் இசையமைக்கவில்லை. ஆனால் பில்லா, ஆரம்பம், நேர்கொண்ட பார்வை என அஜித்'தின் பல படங்களுக்கு யுவன் இசையமைத்துள்ளார்.




 


இந்த நிலையில் நேற்று இசையமைப்பாளர் யுவன் மற்றும் விஜய் ஆகிய இருவரும் ஒன்றாக தோளின் மீது கைபோட்டுக்கொண்டு நிற்கும் புதிய புகைப்படம் ஒன்று வெளியானது, அதனைதொடர்ந்து வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'விஜய் 66' படத்திற்கு இசை யுவன் சங்கர் ராஜாவாக இருக்கலாம் என்ற தகவல் பரவிவருகிறது.

Similar News