விஜய் சேதுபதி, வெற்றி மாறன் உள்ளிட்ட திரையுலகை சேர்ந்த 67 பேர் ஸ்டாலினுக்கு கடிதம்!
விஜய் சேதுபதி, வெற்றி மாறன் உட்பட தமிழ் திரையுலகை சேர்ந்தவர்கள் 67 பேர் இணைந்து ஓர் கோரிக்கை கடிதத்தை தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணி 156 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. இதனைதொடர்ந்து தி.மு.க தலைவர் ஸ்டாலின் முதல்வராக ஒருமனதாக தி.மு.க கூட்டணி எம்.எல்.ஏ'க்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி அமைக்க ஆளுநரிடம் கோரிக்கை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஆளுநர் நாளை காலை 9 மணிக்கு ஆட்சியமைக்க அழைப்பு விடுத்துள்ளார்.
இதற்கிடையில் தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்த வண்ணம் இருந்தனர். இதன் ஒரு பகுதியாக வெற்றிமாறன், விஜய் சேதுபது உள்ளிட்ட 67 திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் ஒரு கோரிக்கை மனுவை ஸ்டாலினிடம் அளித்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.
அந்த மனுவில் எட்டு வழிச்சாலை, கூடங்குளம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போன்ற சில விஷயங்களை பற்றி குறிப்பிட்டுள்ளதாகவும், அதற்கு ஆதரவ தரும்படியாக திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் கையெழுந்திட்டிருப்பதாகவும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.