கடந்த பத்தாண்டுகளில் 70 சதவிகிதம் சரிந்த இடதுசாரி தீவிரவாதம் - இது அமித்ஷா'வின் ஆட்டம் !
இந்திய அளவில் கடந்த பத்து ஆண்டுகளில் 70 சதவிகிதம் இடதுசாரி தீவிரவாத மற்றும், நக்சல் செயல்பாடுகள் குறைந்துள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா நடத்திய ஆய்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய நாட்டில் இடதுசாரி தீவிரவாதம் எனும் நாட்டிற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது, வன்முறை செயல்களில் ஈடுபடுவது, தொடர் கொள்ளை மற்றும் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயல்களில் இறங்குவது போன்ற நக்சல் செயல்பாடுகள் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அதிக அளவில் இருந்துவந்தன. குறிப்பாக நாட்டின் எல்லைப்புற மாநிலங்களில் இது அதிக அளவில் இருந்தன ஆனால் பா.ஜ.க ஆட்சி பொறுப்பிற்கு வந்த பிறகு குறிப்பாக அமித்ஷா உள்துறை அமைச்சராக பதவி ஏற்ற பிறகு இடதுசாரி சிந்தனை தீவிரவாதம் நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பதையும், நாட்டு மக்களின் நிம்மதிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதை பொறுப்பாக உணர்ந்து பல அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டதன் மூலம் 70 சதவிகித அளவிற்கு கடந்த பத்து ஆண்டுகளில் இடதுசாரி தீவிரவாத சம்பவங்களை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளார்.
சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் சமீபத்தில் நடந்த இடதுசாரி தீவிரவாதம் (LWE) நிலையை ஆய்வு செய்ய ஒரு முக்கியமான கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பீகார், ஒடிசா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட், தெலுங்கானா மற்றும் மத்தியப் பிரதேச முதல்வர்கள், ஆந்திராவின் உள்துறை அமைச்சர், மத்திய அமைச்சர்கள், மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மாநில மற்றும் மத்திய அரசுகளின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்ந கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட புள்ளி விவரங்களின் படி வன்முறைச் சம்பவங்கள் 2009 ஆம் ஆண்டில் வரலாறு காணாத 2,258 ல் இருந்து 70 சதவிகிதம் குறைந்து 2020 ல் 665 ஆக குறைந்துள்ளது எனவும், இதன் விளைவாக ஏற்படும் இறப்புகளும் 2010 ஆம் ஆண்டில் 1,005 ஆக இருந்த அதிகபட்சம் 2020 இல் 183 ஆக 82 சதவிகிதம் குறைந்துள்ளது. மாவோயிஸ்ட் செல்வாக்கின் கீழ் உள்ள பகுதிகளின் பரவல் 96 மாவட்டங்களில் இருந்து 2010 இல் 53 ஆக சுருங்கியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.