கேபிள் டிவி இணைப்பு மூலம் ₹ 7000 கோடி கொள்ளையடித்த தி.மு.க - அமைச்சர் குற்றச்சாட்டு!

Update: 2021-03-17 06:04 GMT

தி.மு.க. ஆட்சியில் இருக்கும்போது இலவச வண்ண தொலைக்காட்சி கொடுத்து விட்டு அதற்கு கேபிள் இணைப்பு தருவதாக கூறி ₹ 7,000 கோடி வரை ஊழல் செய்து உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


தேர்தல் பரப்புரையின் ஒரு கட்டமாக அ.தி.மு.க. சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அ.தி.மு.க. சார்பாக போட்டியிடும் சந்தோஷ் என்பவரை அறிமுகப்படுத்தி பேசினார். அப்போது பேசிய அமைச்சர் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருந்த போது மக்கள் பணத்தை கொள்ளையடித்து விட்டு தற்போது ஊர் ஊராகச் சென்று மனுக்களை வாங்கி தலைவர் ஸ்டாலின் பெட்டியில் போட்டுக் கொள்கிறார் என்று குற்றம் சாட்டினார்.

மேலும் திமுக ஆட்சியில் இருந்தபோது இலவச வண்ண தொலைக்காட்சி அளித்துவிட்டு அதற்கு கேபிள் இணைப்பு தருவதாக கூறி ₹ 7000கோடி வரை ஊழல் செய்த கட்சிதான் தி.மு.க. என்றும் வரும் தேர்தலில் மக்கள் தி.மு.க.விற்கு தகுந்த பாடத்தை புகட்டுவார்கள் என்றும் தெரிவித்தார்.



மற்றொரு பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலைஞர் கருணாநிதி மறைவுக்கு பிறகு புறவழியாக கழகத்தின் தலைவராக ஆன ஸ்டாலினால் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது என்று கூறியுள்ளார். தேர்தலுக்காக மட்டும் மக்களை சந்திக்கும் கட்சி தி.மு.க. என்றும் எனவே ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு பொள்ளாச்சி மக்களை பற்றி பேச அருகதை இல்லை என்றும் மன்னராட்சி போல் தி.மு.க.வில் வாரிசு அரசியல் நடந்து வருவதாகவும் அமைச்சர் குற்றம் சாட்டினார்.

நன்றி: நியூஸ் ஜே

Similar News