"குற்றவியல் வழக்குகள் கொண்ட வேட்பாளர்கள்" முதலிடத்தில் தி.மு.க - 77 சதவீத வேட்பாளர்கள் குற்ற பின்னணி கொண்டவர்கள்!

Update: 2021-04-06 01:45 GMT

இன்று தமிழகம் முழுவதும் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடைபெறும் தேர்தலில் தமிழகத்தின் பிரதான கட்சிகள் முதல் சமீபத்தில் துவங்கப்பட்ட கட்சிகள் வரை அனைத்து தரப்பினரும் களம் காண்கின்றன.

இந்த நிலையில் தமிழகத்தின் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள தங்களின் பிரதிநிதியாகவும், மக்களுக்கு சேவை செய்யவும் கட்சிகள் வேட்பாளரை நிறுத்துவதில் குற்றவியல் வழக்குகள் கொண்ட வேட்பாளர்களில் தி.மு.க முதலிடத்தில் உள்ளது. இது மற்ற கட்சிகளுடன் ஒப்பிடும்பொழுது மூன்று மடங்கு அதிகமாகும்.

தமிழகம் முழுவதும் 178 வேட்பாளர்களை தி.மு.க தங்களின் கட்சி சார்பாக அறிவித்துள்ளது அதில் 136 பேர் குற்றவியல் வழக்குகள் உள்ள வேட்பாளர்கள் ஆவார்கள் இதன் விகிதாச்சாரம் கிட்டதட்ட 77 சதவீதம் ஆகும். மற்ற கட்சிகளுடன் ஒப்பிடும்பொழுது இது மூன்று மடங்கு அதிகமாகும்.

அடுத்தபடியாக அ.தி.மு.க சார்பில் 191 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 46 பேர் மீது குற்றவியல் வழக்குகள் உள்ளன. இதன் சதவீதத்தை பார்க்கும் பொழுது 24 என்கிற ரீதியில் உள்ளது.

இப்படி தி.மு.க நிறுத்தியுள்ள 77 சதவீத வாக்காளர்கள் ஒருவேளை வெற்றி பெற்றால் குற்றவியல் வழக்குகள் உள்ள இவர்கள் மக்களுக்கு எப்படி சேவை செய்வார்கள் என்ற சந்தேகம் இப்பொழுதே மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

Similar News