ரூ. 775 கோடியில் தொப்பூர் கணவாய் பகுதியில் சாலை.. மத்திய அரசு செய்ததை, தான் செய்ததாக கூறும் தி.மு.க எம்.பி..
தொப்பூர் கணவாய் பகுதியில் விபத்தை தடுக்க ரூ.775 கோடியில் சாலைகளை சீரமைப்பு பணிக்காக டெண்டர் கோரப்பட்டு உள்ளது. மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் சார்பில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை NH.44 தோப்பூர் கணவாய் பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. இங்கு தினமும் ஏதாவது சிறு விபத்து, உயிர்சேதம் போன்றவை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தொப்பூர் கணவாய் பகுதியில் சாலையை சீரமைத்தால் விபத்துகளை தடுக்கலாம் என்பதால், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார், மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகளை சந்தித்து பேசினார். ஒரு எம்பி ஆக அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையைத்தான் அவர் செய்திருக்கிறார். குறிப்பாக தர்மபுரி மாவட்ட மக்களின் பிரதிநிதியாக தான் இந்த ஒரு கோரிக்கையை அவர் முன் வைத்து இருக்கிறார். இறுதியில் அந்த கோரிக்கை மக்களின் நலனுக்காக இருப்பதை உணர்ந்து மத்திய அரசுதான் அதற்கான முயற்சி எடுத்து தற்போது ஒப்பந்தத்தையும் அதற்கான தொகையையும் நிர்ணயம் செய்து அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது. இதை தன்னுடைய பெரும் முயற்சியின் பெயரில் கிடைத்ததாக திமுக எம்பி அவர்கள் எக்ஸ் வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்து இருப்பது தற்போது பரபரப்பாக பேசப்பட்டு இருக்கிறது.
தர்மபுரி திமுக எம்பி ஆக இருக்கும் செந்தில்குமார் தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் இது பற்றி கூறும் பொழுது, "தர்மபுரி மக்களுக்கு ஓர் நற்செய்தி! எனது தொடர் முயற்சியின் விளைவாக ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சகம் தொப்பூர் கணவாய் பகுதியில் விபத்துகளை தடுக்கும் பொருட்டு சீரமைக்க ஒரு புதிய Elevated road அமைக்க அனுமதி அளித்து, அதற்கான ஏலம் அறிவிப்பினை ரூ. 775 கோடிக்கு அறிவித்துள்ளது" இன்று பதிவிட்டு இருக்கிறார்.
Input & Image courtesy: News