"கடலூரில் ஒரு மேயர், 8 துணைமேயர்" - பட்டியல் நீட்டிய திருமாவளவன்! இடம் கொடுக்குமா தி.மு.க?

Update: 2022-02-27 17:00 GMT

பொது தொகுதியான கடலூரில் ஒரு மேயரும், ஆவடி, திருச்சி, சேலம், மதுரை உள்ளிட்ட மாநகராட்சிகளில் 9 துணைமேயர் பதவிகளும் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தி.மு.க'விடம் எதிர்பார்க்கிறார்.


சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க'வுடன் கூட்டணி அமைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி களம் கண்டது, குறைந்த அளவே விடுதலை சிறுத்தைகளுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டாலும் தற்போது 9 மேயர் உட்பட துணை மேயர் பதவிகளை குறிவைத்துள்ளது விடுதலை சிறுத்தைகள் கட்சி.


இது குறித்து பேட்டி ஒன்றில் திருமாவளவன் தெரிவித்ததாவது, "சமீபத்தில் முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை பட்டியலை வழங்கியுள்ளோம், பொது தொகுதியாக கடலூரில் ஒரு மேயர் ஒதுக்க வேண்டும் என்றும், மேலும் கடலூர், ஆவடி, திருச்சி, சேலம், மதுரை உள்ளிட்ட 9 துணை மேயர் பதவிகள் மற்றும் பேரூராட்சி, நகராட்சி தலைவர், துணைத் தலைவர் பதவிக்கான பட்டியல் தயாரித்து வழங்கியிருக்கிறோம். முதலமைச்சர் அதனை பரிசீலனை செய்வார் என நம்புகிறோம்" என்றார்.



Source - Maalai malar

Similar News