பிரதமர் மோடி கையெழுத்திட்ட முதல் கோப்பு என்ன தெரியுமா? 9.3 கோடி விவசாயிகள் பயன்..

Update: 2024-06-11 12:55 GMT

புதிய அரசின் முதலாவது முடிவு விவசாயிகள் நலனில் அரசின் உறுதிப்பாட்டைக் காட்டுகிறது. பிரதமர் கையெழுத்திட்ட முதலாவது கோப்பு பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவு நிதி விடுவிப்பு தொடர்பானது. எங்களது அரசு விவசாயிகள் நலனில் முழு அர்ப்பணிப்புடன் உள்ளது. எனவே, பொறுப்பேற்றவுடன் கையெழுத்திடப்பட்ட முதல் கோப்பு விவசாயிகள் நலன் தொடர்பானது ஆகும் என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதமாக பதிவிட்டு இருக்கிறார். குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் மூன்றாவது முறையாக இந்தியாவில் பொறுப்பேற்ற பிறகு, அவர் கையெழுத்திடும் முதல் கோப்பு விவசாயிகள் நலனுக்கானது என்பது பெருமை கொள்ள தக்க வேண்டிய ஒரு விஷயம்.


மேலும் "வரும் காலங்களில் விவசாயிகள் மற்றும் வேளாண் துறைக்காக நாங்கள் இன்னும் அதிகமாக பணியாற்ற விரும்புகிறோம்" என பிரதமர் கூறினார். பிரதமர் நரேந்திர மோடி 3-வது முறையாக பிரதமராக பதவியேற்ற பின்னர், பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவு நிதியின் 17-வது தவணையை விடுவிப்பதற்கான தமது முதல் கோப்பில் கையெழுத்திட்டார். விடுவிக்கப்படும் ரூ.20,000 கோடி நிதியின் மூலம் 9.3 கோடி விவசாயிகள் பயனடைவார்கள்.


கோப்பில் கையெழுத்திட்ட பின்னர் பிரதமர் மோடி பேசிய போது, "எங்களது அரசு விவசாயிகள் நலனில் முழு அர்ப்பணிப்புடன் உள்ளது. எனவே, பொறுப்பேற்றவுடன் கையெழுத்திடப்பட்ட முதல் கோப்பு விவசாயிகள் நலன் தொடர்பானது என்பதாகும். வரும் காலங்களில் விவசாயிகள் மற்றும் வேளாண் துறைக்காக இன்னும் அதிகமாக உழைக்க விரும்புகிறோம்" என்று கூறினார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News