பா.ஜ.க மோஹித் கம்போஜ் கோவில்களுக்கு கூம்பு வடிவ ஒலிபெருக்கி வழங்குவதற்கு 9500 கோவில்களில் இருந்து அமோக வரவேற்பு
மும்பையின் பாரதீய ஜனதா கட்சித் தலைவர் மோஹித் கம்போஜ், 16 ஏப்ரல் 2022 அன்று அனுமன் ஜன்மோத்சவ் விழாவையொட்டி கோயில்களுக்கு கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை விநியோகிக்கத் தொடங்கினார். ஹனுமான் ஜன்மோத்சவ் விழாவையொட்டி மாநிலத்தில் உள்ள கோயில்களில் 1,000க்கும் மேற்பட்ட ஒலிபெருக்கிகள் விநியோகிக்கப்படும் என்று கம்போஜ் கூறினார். நாடு முழுவதும் இதற்கான விண்ணப்பங்களையும் அவர் வரவேற்பதாகவும் அப்படி வரும் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு பின்னர் கோவில்களுக்கு ஒலிபெருக்கி வழங்கப்படும் என்றார்.
ஒலிபெருக்கிகளின் முக்கிய விநியோக திட்டம் இன்று தொடங்கப்பட்டாலும், மோஹித் கம்போஜ் முதல் ஒலிபெருக்கியை 14 ஏப்ரல் 2022 அன்று வழங்கியுள்ளார். மும்பையில் உள்ள ஒரு கோவிலுக்கு ஒலிபெருக்கியைக் கொடுக்கும் போது, அவர் ட்வீட் செய்திருந்தார், "இன்று, ஒலிபெருக்கி விநியோகம் தொடங்கியது! முதல் ஒலிபெருக்கி ஸ்ரீ கண்டேஷ்வர் ஹனுமான் கோயில் 11வது பாதை, மது பூங்கா, கர் (மேற்கு), மும்பைக்கு வழங்கப்பட்டது. சியாவர் ராமச்சந்திரா கி ஜெய். ஏப்ரல் 16ஆம் தேதி அனுமன் ஜெயந்தி முதல் மற்ற கோயில்களுக்கு ஒலிபெருக்கிகள் வழங்கப்படும்" என குறுப்பிட்டிருந்தார்.
மோஹித் கம்போஜ் 'ன் ஒலிபெருக்கி விநியோக திட்டத்திற்கு ஏற்கனவே நாடு முழுவதும் உள்ள கோவில்களில் இருந்து 9,500 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏப்ரல் 13 அன்று, கோவில்களுக்கு விநியோகிக்கத் தயாராக வைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கிகள் மற்றும் கோவில்களுக்கு வழங்கப்படும் ஒலிபெருக்கிகள் அடுக்கிய புகைப்படத்தை அவர் வெளியிட்டார். அவரது புகைப்படம், பெயர் மற்றும் ஜெய் ஸ்ரீ ராம் என்ற தலைப்புடன் ஒரு லேபிள் ஒலிபெருக்கிகள் வைத்திருந்த பெட்டிகளில் ஒட்டப்பட்டிருப்பதைக் காணலாம்.