ஹிந்து வெறுப்பா அல்லது காங்கிரஸ் வெறுப்பா? தி.மு.க ஐ.டி விங் செயலாளர் பதிவிட்ட புகைப்படத்தின் உண்மை என்ன?

Update: 2022-01-26 10:30 GMT

பொய் செய்தியை பரப்பும் நோக்கில் தி.மு.க'வின் ஐடி விங்க செயலாளர் டி.ஆர்.பி .ராஜா எம்.எல்.ஏ செய்த ட்விட் ஒன்றால் சமூக வலைதளத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.


தி.மு.க'வின் ஐடி விங்க செயலாளராக சமீபத்தில் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் நீக்கப்பட்டு மன்னார்குடி எம்.எல்.ஏ'வும், எம்.பி டி.ஆர்.பாலுவின் மகனுமான டி.ஆர்.பி ராஜா புதிதாக செயலாளராக நியமிக்கப்பட்டார். நியமிக்கப்பட்டதில் இருந்து ஆக்கப்பூர்வமாக செயல்படுகிறேன் என நினைத்துக்கொண்டு பல போலி செய்தி இணைய அட்டைகளை தயாரித்து பரப்பும் பணியை தி.மு.க ஐடி விங்க் செய்யும் அளவிற்கு அணைய வழிநடத்தினார். அது பலரால் விமர்சிக்க பட்டு வரும் வேளையில் தற்பொழுது பழக்க தோஷத்தில் தனது ட்விட்டர் பதிவில் பழைய புகைப்படத்தை பதிவிட்டு அதற்கு ஜம்பமாக கேப்ஷன் வேறு கொடுத்துள்ளார் டி.ஆர்.பி.ராஜா.


 



இன்றைக்கு கொண்டாடப்படும் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் ஊர்திகள் பற்றிய பதிவுகள் அதிகமாக இணையத்தில் உலாவும் வேளையில் அதனை தன் பங்கிற்கு வைரலாக்குவதாக நினைத்துக்கொண்டு கடந்த 2013'ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் அதுவும் கர்நாடக மாநிலத்தில் ஊர்வலமாக எடுத்துவரப்பட்ட காமதேனு வடிவத்தை குறிப்பிட்டு 'இது எந்த சுதந்திரப்போராட்ட வீரர்?' என குறிப்பிட்டுள்ளார். 2013'ம் ஆண்டு தங்கள் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நடத்தப்பட்ட ஊர்வலம் என்றும் அது பக்கத்து மாநிலத்தில் நடத்தப்பட்டது என்றும் கூட தெரியாதவரைத்தான் ஐடி விங்க் செயலாளராக தி.மு.க நியமித்துள்ளதாக தி.மு.க'வினரே தலையில் அடித்துக்கொள்கின்றனர்.




 


தன் ஐடி விங்க் அணியை போலி செய்தி பரப்ப வைத்தது போல் பழக்க தோஷத்தில் தானும் போலி செய்தி பரப்பி மாட்டிக்கொண்டார் இந்த புதிய தி.மு.க ஐடி விங்க் செயலாளர்.


"அவர் ஏன் இப்படி செய்தார்?"  என்று பலரும் கேள்வி கேட்கும் நிலையில், ஹிந்து மத கடவுள்களை விமர்சிக்கும் நோக்கில் இதை பதிவிட்டாரா ? அல்லது காங்கிரஸ் கட்சியை விமர்சிக்க இப்படி பதிவிட்டாரா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

Similar News