சில தினங்களுக்கு முன்பு மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலின் கருவறையில் தீ விபத்து ஏற்பட்டு பெரும் சேதம் ஆகியுள்ளது . இந்த செய்தி அறிந்த உடன் அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர் காந்தி அங்கு சென்று பார்வையிட்டார். அவரை தொடர்ந்து பா.ஜ.க மாநிலத்தலைவரும் தீயினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து நேரில் சென்று கேட்டறிந்தார்.
இவ்வாறு இருக்கையில் நேற்று ஹிந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தினை ஆய்வு செய்தார். இதனை அறிந்த ஆளுநர் மேதகு தமிழிசை சௌந்தர்ராஜன், சேகர் பாபுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கோயிலை விரைந்து சீரமைக்குமாறு கேட்டுக்கொண்டார்.
மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் பக்தை என்ற முறையில் மாண்புமிகு தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.சேகர் பாபு அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவிலை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன்.அமைச்சரும் ஆவண செய்வதாக உறுதியளித்தார். pic.twitter.com/0QAOkaLgBz
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) June 4, 2021இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கும் போது "மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் பக்தை என்ற முறையில் மாண்புமிகு தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.சேகர் பாபு அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவிலை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அமைச்சரும் ஆவண செய்வதாக உறுதியளித்தார்." என்று கூறி இருந்தார்.