தடுப்பூசிகளை வீணடித்தது தொடர்பாக மாநில அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - Dr எல்.முருகன்!
"தடுப்பூசிகளை பயன்படுத்தியது மற்றும் வீணடித்தது என்பது தொடர்பாக மாநில அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்" என தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இன்று வடபழனி முருகன் கோவிலில் பா.ஜ.க தலைவர் எல்.முருகன் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, "மத்திய அரசு வழங்கிய தடுப்பூசிகளை மாநில அரசை எவ்வளவு பயன்படுத்தியது மேலும் எவ்வளவு வீணடித்தது என்பது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றார், மொத்தத்தில் கொரோனோ தடுப்பூசி பற்றாக்குறைக்கு காரணம் தி.மு.க'தான்" என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
மேலும், கருப்பர் கூட்டத்திற்கு எதிராக வேல் யாத்திரை நடத்தி வைக்கப்பட்ட கோரிக்கைகளை தொடர்ந்து தமிழக அரசிடம் வலியுறுத்துவோம் எனவும் அவர் கூறினர்.