சேவா தினத்தை முன்னிட்டு ரத்த தான முகமை தொடங்கி வைத்த தமிழக பா.ஜ.க தலைவர் Dr. L. முருகன்..!
பிரதமர் மோடியின் ஏழு ஆண்டுகால ஆட்சி நிறைவடைந்ததை முன்னிட்டு பா.ஜ.க தேசிய தலைவர் நட்டா அதை சேவா தினமாக அறிவித்தார். அது மட்டுமின்றி அவர் பா.ஜ.க கட்சி தொண்டர்கள் அனைவரையும் இந்த கொரோனா காலத்தில் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு கேட்டு கொண்டார்.
இந்த நிலையில் தமிழக பா.ஜ.க வின் மாநில தலைவர் எல்.முருகன் ரத்த தான முகமை தொடங்கி வைத்தார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவஹிகையில் "சேவா தினத்தை முன்னிட்டு அடையாறில் உள்ள V.H.S மருத்துவமனயில் நடைபெற்ற ரத்த தான முகாமை தொடங்கி வைத்து பார்வையிட்டேன்." என்று கூறியிருந்தார்.
சேவா தினத்தை முன்னிட்டு அடையாறில் உள்ள V.H.S மருத்துவமனயில் நடைபெற்ற ரத்த தான முகாமை தொடங்கி வைத்து பார்வையிட்ட போது.@JPNadda @blsanthosh @CTRavi_BJP @ReddySudhakar21 #BloodDonation #SevaHiSangathan @MNRajabjptn @KaruNagarajan1 pic.twitter.com/inq30TUME8
— Dr.L.Murugan (@Murugan_TNBJP) June 4, 2021
இந்த ரத்த தான முகாமில் பல கட்சி தொண்டர்கள் முன்வந்து தனது ரத்தத்தை தானம் செய்தனர். தங்களுடைய கட்சியின் ஏழு ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்ததை மக்களுக்கு சேவை செய்து, மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து சேவா தினமாக கொண்டாடும் பா.ஜ.க கட்சியினரின் இந்த செயல்பாடுகளை மக்கள் பாராட்டுகின்றனர்.