அமைச்சர்கள் முன்னிலையில் Dr L முருகன் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றார்!
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று மாற்றியமைக்கப்பட்டது. அதில் புதிதாக 43 பேர் மத்திய அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். அதில் தமிழக பா.ஜ.க தலைவர் Dr L முருகனும் இடம் பெற்றுள்ளார். இந்த நிலையில் நேற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், எல். முருகனுக்கு மத்திய இணைய அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
மத்திய இணைய அமைச்சராக பதவியேற்று கொண்ட எல்.முருகனுக்கு தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை, மீன்வளம் மற்றும் கால்நடை வளர்ப்பு துறை ஒதுக்கப்பட்டது. இதனை அடுத்து இன்று எல்.முருகன் தனக்கு வழங்கப்பட்ட துறைகளில் மத்திய அமைச்சரவை அமைச்சர்களின் முன்னிலையில் பொறுப்பேற்றார். இது குறித்து எல். முருகன் தனது ட்விட்டர் பக்கத்தில் "இன்று காலை மத்திய அமைச்சரவை அமைச்சர்கள் புருஷோத்தம் ருபாலா மற்றும் கிரிராஜ் சிங் அவர்களின் முன்னிலையில் மீன்வளம் மற்றும் கால்நடை வளர்ப்புத்துறை மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்று கொண்டேன்.
அதே போல் இன்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் மத்திய அமைச்சரவை அமைச்சர் அனுராக் தாகூர் ஆகியோரின் முன்னிலையில் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றேன்" என்று அவர் பதிவிட்டு இருந்தார்.