ஆயிரம் விளக்கு தொகுதியில் DYFI-CPI அமைப்பைச் சேர்ந்த 55 இளைஞர்கள் பா.ஜ.க.வில் இணைந்தனர்!

Update: 2021-03-18 10:18 GMT

ஆயிரம் விளக்கு தொகுதியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் பிரிவான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச்(DYFI) சேர்ந்த 55 இளைஞர்கள் அந்த கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதாவில் இணைந்துள்ளனர்.




சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க உறுப்பினர்கள் அந்த சங்கத்தில் இருந்து விலகி பாரதிய ஜனதாவில் இணையும் நிகழ்வு நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் மற்றும் கே.பி.துரைசாமி மற்றும் திரளான பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

ஆயிரம் விளக்கு தொகுதியில் திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் அதன் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தரவில்லை. தெரு பிரச்சனையிலிருந்து தேசிய பிரச்சனை வரை அனைத்திலும் தலையிடக் கூடிய அமைப்பாக செயல்பட்டு வரும் இவர்கள் ஜாதி மத மோதல்களைத் தூண்டும் வண்ணமும் செயல்பட்டு வருகின்றனர்.




போராட்டம் செய்வதற்காக மட்டுமே இவர்களை கம்யூனிஸ்ட் கட்சி பயன்படுத்தி வருவதாகவும் இவர்கள் நலனில் உண்மையான அக்கறை அவர்களுக்கு இல்லை என்றும் இளைஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிராக போராட்டம் செய்து வேலைவாய்ப்பு உருவாவதைத் தடுத்து இளைஞர்களின் வாழ்க்கையை கெடுப்பதாக கம்யூனிஸ்ட் கட்சி மீதும் அதன் மாணவர் பிரிவான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மீதும் அதன் உறுப்பினர்களுக்கு அதிருப்தி இருக்கிறது.

எனவே இளைஞர்கள் மீதும் நாட்டின் மீதும் உண்மையான அக்கறை கொண்ட பாரதிய ஜனதா கட்சியில் தங்களை இணைத்துக் கொள்வதற்காக அவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று கட்சியின் தலைவர்கள் முன்னிலையில் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர். ஆயிரம் விளக்கு தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் குஷ்புவை எதிர்த்து தி.மு.க. சார்பாக இந்து விரோதி டாக்டர் எழிலன் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News