அடுத்து என்ன பக்கவாதமா? செந்தில்பாலாஜியை தலைகீழ் நின்று தண்ணீர் குடிக்கவைக்கும் ED...

Update: 2023-11-21 04:41 GMT

உடம்பு முழுவதும் இவ்ளோ வியாதியா? செந்தில்பாலாஜி விவகாரத்தில் நடப்பது செட்டப்பா அல்லது உண்மையா?

செந்தில் பாலாஜி விவகாரம் பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது பத்து முறை ஜாமீன் நிராகரிக்கப்பட்டு 11-வது முறையாக எப்படியும் ஜாமீன் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் நாளுக்கு நாள் செந்தில் பாலாஜியின் உடல் மோசமாகி, மோசமாகி வருகிறது என அவரது தரப்பினர் கூறி வருகின்றனர். புழல் சிறையில் இருந்து ஸ்டான்லி மருத்துவமனை, புழல் சிறையில் இருந்து ஓமந்தூரார் மருத்துவமனை என செந்தில் பாலாஜி மருத்துவமனைகளுக்கு அதிகம் விஜயம் செய்து அவ்வப்போது உடல் நிலையை பரிசோதித்து வருகிறார்.

தற்பொழுது ஓமந்தூரார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனையில் இருந்து வருகிறார், செந்தில் பாலாஜிக்கு இருபதாம் தேதி ஜாமின் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை 28ஆம் தேதி நீதிபதி ஒத்தி வைத்துள்ளார்.

இந்த நிலையில் செந்தில் பாலாஜிக்கு கடந்த ஜூன் 22ஆம் தேதி பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது, இதயத்தில் அடைப்பு இருப்பதாக கூறித்தான் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை மற்றும் ஓய்வில் இருந்தார், தற்பொழுது பைபாஸ் அறுவை சிகிச்சை செய்த அவருக்கு அதனை தொடர்ந்து ஓய்வு கிடைக்கவில்லை எனவும் அதனை தொடர்ந்து செந்தில்பாலாஜிக்கு வேறு சில உடல் உபாதைகளும் இருப்பதாகவும் அடிக்கடி அவரது தரப்பில் கூறப்படுகிறது...

செந்தில்பாலாஜிக்கு அடிக்கடி கால் மரத்துப் போவது போன்ற உணர்வு ஏற்படுவதாகவும், இதற்கு மூளையில் உள்ள சிறு கட்டியே காரணம் எனவும் கூறப்படுவதாக செந்தில் பாலாஜி தரப்பு தெரிவித்தது. கால் மரத்துப் போவது மட்டுமல்லாமல் தீபாவளி அடுத்த சில தினங்களில் செந்தில் பாலாஜிக்கு வாந்தி, மயக்கம் இருந்ததாக கூறி அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.

அப்பொழுது பித்தப்பையில் கற்கள் இருப்பதாகவும் செந்தில் பாலாஜிக்கு மருத்துவ அறிக்கை தரப்பட்டது, தற்பொழுது செந்தில் பாலாஜிக்கு எடுக்கப்பட்ட எம்ஆர்ஐ ஸ்கேனில் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பது தெரியவந்துள்ளது என அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து செந்தில் பாலாஜியின் எம்ஆர்ஐ ஸ்கேன் உட்பட மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய உச்சநீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.

எப்படியும் செந்தில் பாலாஜிக்கு உடம்பில் இருக்கும் பிரச்சனை ஏதாவது ஒன்றைக் கூறி அதன் மூலம் ஜாமின் வாங்க திமுக தரப்பு துடித்து வருவதாகவும், ஆனால் நீதிமன்றமும் அமலாக்க துறையும் இந்த விவகாரத்தில் மிகவும் உறுதியுடன் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செந்தில் பாலாஜிக்கு நாளுக்கு நாள் ஏதாவது ஒரு வியாதி மற்றும் ஏதாவது ஒரு உடல் ரீதியிலான பாதிப்பு இருப்பதாக கூறி நீதிமன்றத்தை செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வாங்கி விடலாம் என செந்தில் பாலாஜி தரப்பு கணக்கு போட்டு வரும் அதே நேரத்தில் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை விரைவில் திஹார் சிறையை நோக்கி எடுக்கலாம் என கணக்கு போட்டு வருவதாகவும் அரசியல் விமர்சகர்கள் நேர்காணல்களில் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் கடந்த 10 முறை ஜாமீன் நிராகரிக்கப்பட்டதற்கு அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றபத்திரிக்கையே காரணம் எனக் கூறப்படுகிறது. அதுபோலத்தான் இந்த முறையும் கண்டிப்பாக செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்காது, எனவும் அதற்கு தேவையான வேலைகளை அமலாக்கத்துறை செய்து தயாராக வைத்துவிட்டது எனவும் கூறப்படுகிறது.

Similar News