"மத்திய அரசு தான், தனிப்பட்ட கருத்துக்கு இடமில்லை" EPS விளக்கம்!

Update: 2021-06-05 09:42 GMT

தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க வலுவான எதிர் கட்சியாக சட்டமன்றத்திற்குள் நுழைந்தது. எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்து எடுக்கப்பட்டார். இதனை தொடர்ந்து நேற்று அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் சென்னை மாவட்ட செயலாளர்களுடன் இ.பி.எஸ் ஆலோசனை மேற்கொண்டார்.


ஆலோசனை முடிந்து செய்தியாளர்களை சந்தித்த போது "கோதாவரி-காவேரி இணைப்பு திட்ட அறிக்கையை இறுதி செய்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து, இதனால் பல விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். அதே போல் நான் முதல்வராக இருந்த போது இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்துமாறு பிரதமரிடம் கேட்டுக்கொண்டேன், தற்போது அதை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்த பிரதமருக்கு நன்றி என்றார். அதன் பின் கொரோனாவால் ஏற்படும் இறப்பு அதிகமாகி உள்ளது எனவே கொரோனா பரிசோதனை மையத்தை அதிகப்படுத்த  வேண்டும், நான் முதல்வராக இருந்தபோது நோயை கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகளை  இந்த அரசும் மேற்கொண்டு இந்த நோய் தொற்றை கட்டுப்படுத்த கூடுதல் கவனம் வேண்டும்" என்றும் அவர் தெரிவித்தார்.


அங்கு இருந்த செய்தியாளர்கள் சசிகலா குறித்து கேள்வி எழுப்பிய போது, "சசிகலா அ.தி.மு.க-வில் இல்லை என்பதை ஏற்கனவே நான் தெளிவு படுத்தி விட்டேன், அவர் அ.ம.மு.க   தொண்டர்களுடன் தான் தொலைபேசியில் தொடர்ப்பு கொண்டாரே தவிர அ.தி.மு.க தொண்டர்களுடன் இல்லை. அது மட்டுமின்றி, அவர் அரசியலில் இருந்து விலகுவதாக அவரே தெரிவித்து விட்டார்" என்று இ.பி.எஸ் பதில் அளித்தார்.  

அதே போல் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைக்கலாமா என்ற கேள்விக்கு "அனைவரும் மத்திய அரசு, மாநில அரசு என்று தான் அழைக்கின்றனர் ஆகையால் இங்கு தனிப்பட்ட கருத்துக்கு  இடம் இல்லை" என்று தெளிவாக கூறினார். 

Tags:    

Similar News