கைமாறியது ஆவணங்கள்! ஆளுநர் விவகாரத்தில் தீவிரமாக இறங்கியது NIA... சிக்கப்போகும் நெட்ஒர்க்....

Update: 2023-11-15 02:19 GMT

வசமாக சிக்கிய நீட் போராளி.... இறங்கியது என்.ஐ.ஏ...

தமிழக ஆளுநர் மாளிகையில் கடந்த அக்டோபர் மாதம் 26ஆம் தேதி ஏற்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. கிண்டியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகையில் சென்னையைச் சேர்ந்த கருக்கா வினோத் என்கின்ற ரவுடி திடீரென பெட்ரோல் குண்டு வீசினார். உடனடியாக அங்கிருந்த காவல்துறையினர், பாதுகாப்பு படையினர் கருக்கா வினோத்தை சுற்றி வளைத்து பிடிக்கும் பொழுது அவரிடமிருந்து மேலும் இரண்டு வெடிக்காத பெட்ரோல் குண்டு கைப்பற்றப்பட்டது.

அதன்பின் கருக்கா வினோத்தை கைது செய்து காவல் துறையினர் சிறையில் அடைக்கும் பொழுது நீட் தேர்வு விலக்கு மற்றும் 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து ஆளுநர் மாளிகை முன்பு குண்டு வீசியதாக ரவுடி கருக்கா வினோத் தெரிவித்தது சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதாக ஆளுநர் மாளிகை தரப்பில் இருந்து புகார் தெரிவிக்கப்பட்டது, இது மட்டுமல்லாமல் ஆளுநர் விவகாரத்தில் திமுக அலட்சியமாக நடந்து கொள்கிறது எனவும் ஏற்கனவே தருமபுர ஆதீனத்திற்கு பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு செல்லும் பொழுது ஆளுநருக்கு ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடுகளையும் சுட்டிக்காட்டி இந்த புகாரை ஆளுநர் மாளிகை தெரிவித்து இருந்தது.

மேலும் ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் கொண்டு வீசப்பட்ட சம்பவத்தில் கருக்கா வினோத்திற்கு மட்டுமே தொடர்புள்ளது. வேறு யாருக்கும் தொடர்பு கிடையாது தேனாம்பேட்டையில் இருந்து ஆளுநர் மாளிகை வரை தனியாக நடந்து வரும் கருக்கா வினோத்தின் வீடியோவை வெளியிட்டு காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து தீர விசாரித்து அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் ஆளுநர் தரப்பிலிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது, இப்படி தமிழகத்தில் நடந்த இந்த விவகாரம் குறித்து நாடு முழுவதும் செய்தியாக இருந்த நிலையில் ஆளுநர் மாளிகைக்கும், தமிழக அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன என்பது இந்தியா முழுவதும் பரவியது.

இப்படிப்பட்ட சூழலில் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசியது தேசிய பாதுகாப்பு குறித்த விஷயமாகும் எனவே இந்த வழக்கை என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகைமை தான் விசாரிக்க வேண்டும் என அப்பொழுதே பாஜக தரப்பிலிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது, இதனை தொடர்ந்து என்.ஐ.ஏ இந்த வழக்கை விசாரிக்கும் என அறிவித்து என்.ஐ.ஏ வசம் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கை ஒப்படைத்தனர்.

இந்த நிலையில் பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக என்.ஐ.ஏ போலீசார் ஏற்கனவே ஆளுநர் மாளிகை சென்று விசாரித்துள்ளனர். தற்பொழுது இந்த வழக்கு மத்திய உள்துறையின் உத்தரவின் பெயரில் என்.ஐ.ஏ போலீசார் விசாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது, ஏற்கனவே இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை தமிழக போலீசார் என்.ஐ.ஏ விடம் கொடுக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. என்.ஐ.ஏ இந்த விவகாரத்தில் இறங்கும் பட்சத்தில் கருக்கா வினோத்தை தூண்டியது யார்? சொல்லி இந்த வேலையை கருக்கா வினோத் செய்தார்? இதன் பின்னணி என்ன? உண்மையிலேயே கருக்கா வினோத் தான் நீட் விவகாரத்தை முன்வைத்து இதனை செய்தாரா? அல்லது வேறு யாரும் கருக்கா வினோத்தை செய்யச் சொல்லி ஏவி விட்டார்களா? என்பது போன்ற அனைத்து விவகாரங்களையும் என்.ஐ.ஏ அலசி ஆராய்ந்து அறிக்கையாக கொடுத்து விடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வழக்கில் விரைவில் இதன் பின்னணி என்ன என தெரியவரும்பட்சத்தில் சட்டபூர்வமான நடவடிக்கைகள் கடுமையாக இருக்கும் எனவும் ஆளுநர் விவகாரம் என்பதால் மத்திய அரசும் உன்னிப்பாக கவனித்து வருகிறது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Similar News