இந்திய அரசியல் சாசனத்தில் 'ஒன்றிய அரசு' என குறிப்பிடப்பட்டுள்ளதா? பா.ஜ.க தலைவர் SG சூர்யா விளக்கம்!

Update: 2021-06-09 12:15 GMT

தி.மு.க-வினர் மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசின் மீது கொண்ட வெறுப்பின் காரணமாக மத்திய அரசு என்ற ஒன்றே இல்லை என்றும், இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என்பதால் ஒன்றிய அரசு என்றே அழைக்க வேண்டும் என்றும் பிரிவினையை ஊக்குவிக்கும் வண்ணம் பேசி வருகின்றனர்.

இது உண்மையா என்று ஆராய்ந்து நடுநிலையுடன் செய்தி வெளியிட வேண்டிய ஊடகங்களும் தி.மு.க-வினரின் பொய்ப் பிரச்சாரத்தையே தொடர்கின்றன. உண்மையிலேயே அரசியல் அமைப்புச் சட்டத்தில் 'ஒன்றிய அரசு' என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறதா? மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைப்பதை பா.ஜ.க எதிர்ப்பது ஏன்?

இந்த கேள்விகளுக்கு தமிழக பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் SG சூர்யா புதிய தலைமுறை தொலைக்காட்சி நேரலை விவாதத்தில் பதிலளித்திருக்கிறார். அவர் கூறியதாவது, "இந்திய அரசியலமைப்பு சாசனம் என்பது டாக்டர் அம்பேத்கரால் இயற்றப்பட்டது. இந்திய அரசியலமைப்பு புத்தகத்தில் Union Government (ஒன்றிய அரசு) என்று எங்கேயாவது குறிப்பிடப்பட்டுள்ளதா? அப்படி குறிப்பிடப்பட்டிருந்தால் நான் இந்த விவாதத்திலிருந்து ஒன்றிய அரசு என்று கூறுகிறேன். அதே போல் இந்திய அரசியலமைப்பு சாசனத்தில் Government of India (இந்திய அரசு) என்ற பதம் 107 இடத்திலும் Central Government (மத்திய அரசு) என்ற பதம் 6 இடங்களிலும் பயன்படுத்தப்பட்டு உள்ளது."

"நான் டாக்டர் அம்பேத்கரை பின்பற்ற ஆசைப்படுகிறேன். திமுக என்பது எப்போதுமே பிற்படுத்தப்பட்ட பட்டியலின மக்களுக்கு விரோதமாக இருக்கும் கட்சி என்பதில் எந்த மாற்றமும் இல்லை." என்று கூறியுள்ளார். மேலும் "ஒன்றிய அரசு என்பது ஏன் நெருடலாக இருக்கிறது?" என்ற நெறியாளரின் கேள்விக்கு, "டாக்டர் அம்பேத்கர் அவர்கள் இந்திய அரசியலமைப்பில் கூறாத ஒன்றை இவர்கள் புகுத்துகிறார்கள்" என்றும் "டாக்டர் அம்பேத்கரை அவமதிக்கிறார்கள் என்று நாங்கள் வெகுண்டு எழுகிறோம்" என்றும் "டாக்டர் அம்பேத்கரை அவமதிக்கிறார்கள்" என்று மக்களுக்கு தெரிவிக்கும் விதமாகவே நாங்கள் இதனை எதிர்க்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News