தமிழக பத்திரிக்கையாளருக்கே இந்த ஒரு நிலைமையா.. கண்டனத்தை மட்டும் பதிவு செய்த முதல்வர்.. SG. சூர்யா கண்டனம்..

Update: 2024-01-27 12:36 GMT

திருப்பூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக இயங்கி வந்த மதுபான கடைகள் குறித்த விவரங்களை தொலைக்காட்சி செய்திகள் மூலமாக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற காரணத்திற்காகவே நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா செய்தியாளராக பணியாற்றி வரும் நேச பிரபு அவர்கள் அடையாளம் தெரியாத கும்பல் ஒன்றினால் கொலை வெறி தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறார். குறிப்பாக அந்த கும்பல் அருவாள் போன்ற ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒரு சம்பவம் தமிழகத்தின் சட்ட ஒழுங்கு செயல்படும் அவலத்தை எடுத்துக்காட்டு இருக்கிறது.

பத்திரிக்கையாளர் ஒருவருக்கு இப்படி ஒரு நிலை என்றால் தமிழகத்தில் உள்ள சாதாரண மக்களின் நிலைமையை நினைத்து பாருங்கள். இந்த ஒரு நிகழ்வுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். முதல்வர் நான் தான் என்பதை மறந்து எதிர்க்கட்சி தலைவர் போல இப்படி கண்டனம் மட்டும் தெரிவித்து இருப்பது மக்களை கோபத்துக்கு உள்ளாக்கி இருப்பதாக பாஜக மாநில செயலாளர் SG. சூர்யா கருத்தை தெரிவித்து இருக்கிறார்.


மேலும் இந்த ஒரு சம்பவம் தொடர்பாக பாஜக மாநில செயலாளர் SG.சூர்யா அவர்கள் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் அறிக்கை ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். அந்த அறிக்கையில் அவர் கூறும் பொழுது, "முதல்வர் மு.க.ஸ்டாலின் நியூஸ்7 செய்தியாளர் சகோதரர் நேசபிரபுவின் கொலைவெறி தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்திருப்பது இன்னும் தமிழகத்தின் முதல்வர் இவர் தானா? என தமிழர்களை வினவ வைத்துள்ளது! எந்த லட்சணத்தில் தமிழகத்தில் தி.மு.க ஆட்சி உள்ளது என பாரீர்! என்று கூறி தன்னுடைய அறிக்கையை பகிர்ந்து இருக்கிறார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News