பா.ஜ.க நிவாரணம்.. உயிரிழந்தவர்களின் குடும்ப வாழ்வாதாரத்திற்காக தான்.. SG.சூர்யா விளக்கம்..

Update: 2024-06-22 14:01 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 55 உயிர்கள் தற்போது வரை பறிபோய் இருக்கிறது. மேலும் 150- க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். கள்ளக்குறிச்சியில் பல்வேறு கட்சித் தலைவர்கள் நேரடியாக சென்று மக்களுக்கு ஆறுதல்களை தெரிவித்தார்கள். இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்ததோடு, தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்று அறிவித்தார். அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு விரைவாக நிவாரணம் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று உறுதியளித்தார்.

அதன்படி, இன்று தமிழக பாஜக மாநில செயலாளர் SG. சூர்யா அவர்களும், மாவட்ட பாஜக நிர்வாகிகள் அனைவரும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை நேரடியாக சந்தித்து, அவர்களுக்கு பாஜக உறுதி அளித்தது போல, ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலை நேரடியாக அவர்களுடைய வீட்டிற்கு சென்று கொடுத்து இருந்தார்கள். ஆனால் பாஜக தற்போது உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இப்படி பணம் தருவது, அவர்களை ஊக்குவிக்கும் செயல் என்று பல்வேறு கருத்துக்களும் ஒரு பக்கம் எழுந்து கொண்டிருக்கிறது.


இதுகுறித்து மாநில செயலாளர் SG.சூர்யா அவர்கள் கூறும் பொழுது, "தமிழக பாஜகவை தவறாக புரிந்து வைத்திருக்கிறார்கள். மாநிலத் தலைவர் அண்ணாமலை அண்ணா நேரடியாக ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று பார்த்த பொழுது, அவர்கள் மிகவும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் அத்தகையவர்கள் இடம் ஈமச்சடங்கு செய்வதற்கு கூட பணம் இல்லை. அதனால்தான் தற்போது பாஜக இறந்தவர்களின் குடும்பத்தின் நிலைமையை கருத்தில் கொண்டு தான் ஒரு லட்சம் ரூபாய் தருவதாக அறிவித்து இருக்கிறோம். இந்த பணம் உயிரிழந்தவர்களின் குடும்ப வாழ்வாதாரத்திற்கானதே தவிர, மீண்டும் கள்ளச்சாராயத்தை ஊக்குவிப்பதற்காக பாஜக இவற்றை செய்யவில்லை" என்று விளக்கம் அளித்து இருக்கிறார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News