"நேரடி விவாதத்திற்கு தயாரா?" காங்கிரஸ் விஜய் வசந்திற்கு, பா.ஜ.க S.G சூர்யா சவால்!
கன்னியாகுமாரி எம்.பி-யாக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திரு வசந்தகுமார் மறைந்ததை அடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் சார்பில், வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் போட்டி இடுகிறார். இவருக்கு எதிராக முன்னாள் மத்திய அமைச்சர் திரு பொன். ராதாகிருஷ்ணன் பா.ஜ.க சார்பில் போட்டி இடுகிறார். இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது, காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் மத்திய மோடி அரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டி திட்டத்தை விமர்சனம் செய்து பேசியுள்ளார். ஆனால் மறைந்த கன்னியாகுமாரி முன்னாள் காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் ஜி.எஸ்.டி திட்டத்தை முழுமனதாக வரவேற்றிருந்தார். இதனை சுட்டிக்காட்டி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் பா.ஜ.க செய்தி தொடர்பாளர் எஸ்.ஜி.சூர்யா. "உங்கள் தந்தை ஒரு தேசியவாதி. அவர் உங்களை போல் கீழ் தரமான வாக்கு வங்கி அரசியல் செய்யவில்லை", என்று குறிப்பிட்டிருந்தார்.
அதற்கு ட்விட்டரில் பதிலளித்த விஜய் வசந்த், நான் காங்கிரஸ் கொண்டு வந்த ஜி.எஸ்.டி-யை ஆதரிக்கிறேன், பா.ஜ.க கொண்டு வந்த ஜி.எஸ்.டி-யை ஆதரிக்கவில்லை என்று பதிவிட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்த பா.ஜ.க செய்தி தொடர்பாளர் எஸ்.ஜி.சூர்யா, "ஜி.எஸ்.டி குறித்து நேரடி விவாதத்திற்கு தயாரா?" என்று விஜய் வசந்திற்கு பகிரங்க சவாலை விடுத்துள்ளார். இது குறித்து எஸ்.ஜி.சூர்யா பதிவிட்ட ட்விட்டர் பதிவுகளில், "விவாததிற்கான இடத்தையும் தளத்தையும் நீங்களே தேர்வு செய்யுங்கள். ஆனால் குடும்ப தலைவர் உதயநிதி போல் நீங்களும் என்னை ப்ளாக் செய்து விடுவீர்கள் என்று தெரியும். அதனால் சில உண்மைகளை இங்கே பதிவிடுகிறேன்.
குஜராத், தமிழகம் போன்ற முக்கிய உற்பத்தி மாநிலங்கள், உங்கள் காங்கிரஸின் ஜி.எஸ்.டி-யை எதிர்த்தன, ஏனென்றால் :
1. உற்பத்தி இடத்திலிருந்து விற்பனை இடத்திற்கு ஜி.எஸ்.டி வரி விதிப்பு புள்ளியை மாற்றுவதால் மாநிலங்கள் வருவாயை இழக்கும்.
2. ஜி.எஸ்.டி கவுன்சிலின் முடிவு தொடர்பாக நிதியமைச்சருக்கு முழுமையான VETO அதிகாரம் உண்டு.
ஆனால் பா.ஜ.க-வின் ஜி.எஸ்.டி-யில்,
1. உற்பத்தி மாநிலங்களுக்கான இழப்புகளை ஈடுசெய்ய 5 வருடங்களுக்கு அரசியலமைப்பு உத்தரவாதம் அளித்துள்ளோம்.