"துரியோதனனின் அட்டூழியங்களுக்கு திருதராஷ்டிரன் துணை போல", உதயநிதியை தூக்கி பிடிக்காதீர்கள் முதல்வரே - எச்சரிக்கும் SG.சூர்யா

Update: 2022-05-21 11:31 GMT

நெல்லை மாவட்டத்தில் கல்குவாரியில் சிக்கி பரிதாபமாக 4 பேர் உயிரிழந்தனர். அதில் இன்றுவரை ஒருவரை மீட்க முடியாமல் உள்ள நிலையில், தி.மு.க. கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியான நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை அக்கட்சி தலைவர்கள் பார்த்து வருவது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக தமிழக பா.ஜ.க. செயலாளர் எஸ்.ஜி.சூர்யா வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இன்று எம்.எல்.ஏ, எம்.பி, மேயர், அமைச்சர் முதல் அனைத்து தி.மு.க மக்கள் பிரதிநிதிகளும் சிறிதும் கூச்சமின்றி தங்கள் பட்டத்து இளவரசர் நடித்து, வெளியிட்ட "நெஞ்சுக்கு நீதி" என்ற திரைப்படத்திற்கு சென்றது மட்டுமின்றி அதை பெரிய சாதனை போல் தம்பட்டம் அடித்து வருகின்றனர்.

அரசியலில் தங்கள் சுய முன்னேற்றத்திற்காக இவர்கள் கூச்சமின்றி சதாசர்வ காலமும் தகுதியற்ற உதயநிதியை புகழ்வது வெட்கக்கேடானது. இவையனைத்தையும் பார்த்து மௌனம் காக்கும் மு.க.ஸ்டாலினின் செயல்பாடு துரியோதனனின் அட்டூழியங்களுக்கு திருதராஷ்டிரன் துணை போனது போல உள்ளது.

Full View

தகுதியற்றவர்களை தலையில் தூக்கி வைத்து செயற்கை கொண்டாட்டங்கள் செய்யும் கேடுகெட்ட தி.மு.க கூட்டத்திற்கு மக்கள் பாடம்புகட்டாவிட்டால் தமிழர்களின் தலையெழுத்து கேள்விக்குறியே.

கல்குவாரி மரணங்கள், சென்னையில் பட்டப்பகலில் கொலைகள், மின்சாரம் இல்லாமல் தவிக்கும் தமிழகம், ஒவ்வொரு நாளும் தி.மு.க குண்டர்களிடம் இருந்து நீதி வேண்டி ஆட்சியர் அலுவலகங்களில் தீக்குளிக்கும் அப்பாவி மக்கள் என தமிழகமே அல்லோலப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் மனசாட்சி சிறிதும் இன்றி திரைப்படம் பார்த்து துதி பாடும் இவர்களை வரலாறு மன்னிக்காது.

விழித்துக்கொள் தமிழா! இவ்வாறு அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Facebook

Tags:    

Similar News