அனுமதி பெறாமல் 100 நாள் பிரச்சாரம்.. உதயநிதி அதிரடி கைது.!

அனுமதி பெறாமல் 100 நாள் பிரச்சாரம்.. உதயநிதி அதிரடி கைது.!

Update: 2020-11-20 17:38 GMT

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் 5 மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் கருணாநிதி, ஜெயலலிதா இல்லாமல் நடைபெறும் முதல் தேர்தல் ஆகும். இதனால், சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியயை அமைக்க போவது யார்..? என்ற எதிர்பார்ப்பு உள்ளது.


இந்நிலையில், சட்டமன்ற தேர்தலை தொடர்ந்து 100 நாள் பிரச்சாரத்தை இன்று திருக்குவளையில் இருந்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கினார். இந்த பிரச்சாரமானது நாகை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் முதல்கட்டமாக பிரச்சாரம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.


இந்நிலையில், திருக்குவளையில் உரிய அனுமதி பெறாமல் கூட்டத்தை கூட்டியதாக உதயநிதி ஸ்டாலினை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் திமுக தொண்டர்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது.
 

Similar News