சசிகலாவை வரவேற்கும்போது 100 பேர் மனித வெடிகுண்டாக மாறுவார்கள்.. அமைச்சர் சி.வி.சண்முகம் பரபரப்பு பேட்டி.!

சசிகலாவை வரவேற்கும்போது 100 பேர் மனித வெடிகுண்டாக மாறுவார்கள்.. அமைச்சர் சி.வி.சண்முகம் பரபரப்பு பேட்டி.!;

Update: 2021-02-06 16:48 GMT

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்து விடுதலை பெற்ற சசிகலா பெங்களூரிலேயே தங்கியுள்ளார். அவர் வருகின்ற 8ம் தேதி தமிழகம் திரும்புவார் என தகவல்கள் வெளியாகியது.

இந்நிலையில், சசிகலா தமிழகம் திரும்பும்போது மிகப்பெரிய கலவரம் வெடிக்கும் எனவும், இதனை சசிகலாவும், தினகரனும் சேர்ந்து செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் சி.வி.சண்முகம் பரபரப்பான தகவலை கூறியுள்ளார். சென்னை டிஜிபியிடம் புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சி.வி.சண்முகம், உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கின்ற வகையில் சசிகலா அதிமுகவின் கொடியை பயன்படுத்துகிறார்.

தமிழகத்தில் அமைதியை சீரிகுலைப்பதற்காக தினகரனும், சசிகலாவும் திட்டமிட்டுள்ளனர். அந்த கூட்டத்தில் 100 பேர் மனித வெடிகுண்டாக மாறப்போகிறார்கள் எனவும் தெரிவித்தார். இதனை உறுதிப்படுத்தும் விதமாக டிடிவி தினகரனின் பேட்டி அமைந்துள்ளது. பொதுமக்களின் உடமைக்கும், உயிருக்கும் ஆபத்து விளைவிக்க திட்டமிட்டுள்ளனர் என அமைச்சர் குற்றம்சாட்டினார். ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்., தலைமையிலான இரட்டை இலை கொண்டவைதான் உண்மையான அதிமுக. இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் பேட்டியளித்த சம்பவம் தற்போது மீண்டும் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற தகவல்கள் வருவதால் ஓசூர் முதல் சென்னை வரை உள்ள மக்கள் அச்சப்படும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். சாலையோரம் உள்ள மக்களின் உடமைகளுக்கு காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Similar News