1000 கிமீ அப்பால் இருந்து வந்த ஆங்கிலத்தை உங்களுக்கு பிடிக்கும்,ஆனால் இந்தியா மொழிகள் பிடிக்காதா?அமித் ஷா கேள்வி!

தமிழகத்தில் ஆட்சி புரிந்து வருகின்ற திமுக அரசு தன்னுடைய ஊழலையும் தவறையும் மறைப்பதற்காக எந்தவித தொடர்பும் சம்பந்தமும் இல்லாத இந்தி மொழி எதிர்ப்பு போராட்டத்தை பயன்படுத்தி வருகிறது ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இந்திய மொழிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது
மொழிகளின் பெயர்களால் நாட்டை பிளவுபடுத்த நினைக்கும் சக்திகளுக்கு இதனை ஒரு வலுவான செய்தியாகவே சொல்கிறேன் மருத்துவம் மற்றும் பொறியியல் பாடத்திட்டத்தை தமிழில் மொழிபெயர்க்க கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக அரசை வலியுறுத்தி வருகிறோம் ஆனால் திமுக அரசுக்கு அதற்கான தைரியம் இல்லை ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் இருந்து வந்த ஆங்கிலத்தை நீங்கள் விரும்புகிறீர்கள் ஆனால் நம் இந்திய மொழிகள் உங்களுக்கு பிடிக்கவில்லை
வளர்ச்சியை பற்றி பேசுங்கள் அதை விட்டுவிட்டு உங்கள் தவறுகளையும் ஊழல்களையும் மறைக்க இந்தி எதிர்ப்பு போராட்டத்தை நடத்துகிறீர்கள் நீங்கள் செய்யும் தவறுகளை தமிழகத்தின் கிராமங்கள் தோறும் எடுத்துச் சென்று அம்பலப்படுத்துவோம் என அமித்ஷா தெரிவித்துள்ளார்