வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு பேரவையில் தாக்கல்.. ராமதாஸ் கோரிக்கையை நிறைவேற்றிய முதலமைச்சர்.!

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு பேரவையில் தாக்கல்.. ராமதாஸ் கோரிக்கையை நிறைவேற்றிய முதலமைச்சர்.!

Update: 2021-02-26 16:04 GMT

வன்னியர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 10.5 சதவீதம் உள்ஒதுக்கீட்டுக்கான மசோதாவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேரவையில் தாக்கல் செய்துள்ளார்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வன்னியர்களுக்காக அரசு வேலைவாய்ப்பில் 20 சதவீதம் உள்ஒதுக்கீடு இருக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வந்தார். தற்போது அதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நல்ல முடிவை அறிவித்துள்ளார்.

அவருக்கு வன்னியர்கள் அனைவரும் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும், நன்றிகளையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த கோரிக்கையால் அரசு வேலை வாய்ப்பில் அவர்கள் உள் நுழைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Similar News