திருமண உதவித்திட்டத்தில் 11 லட்சம் பெண்கள் பயனடைந்துள்ளனர்.. கோவையில் முதல்வர் பேச்சு.!

திருமண உதவித்திட்டத்தில் 11 லட்சம் பெண்கள் பயனடைந்துள்ளனர்.. கோவையில் முதல்வர் பேச்சு.!

Update: 2021-02-15 12:24 GMT

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, 123 ஏழை ஜோடிகளுக்கு திருமணத்தை முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் நடத்தி வைத்தனர்.

கோவை, பேரூர் பகுதியில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டு அதிமுக சார்பில் 123 ஏழை ஜோடிகளுக்கு இன்று திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு தேவையான சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த திருமணத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னின்று நடத்தி வைத்தனர். உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கினார்.

இந்நிலையில், திருமணம் முடிந்த பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: சாதி மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி அதிமுக, நமக்கு சாதி மதம் பேதமில்லை. காற்றில் பறக்க விடும் வாக்குறுதிகளை எப்போதும் அள்ளி வீசுவது திமுக. ஏழை மக்கள் மீது அதிகமான பாசத்தை கொண்டவர் ஜெயலலிதா எனக்கூறினார்.

மேலும் திருமண உதவி திட்டத்தின் கீழ் 11 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பயனடைந்துள்ளனர். அது மட்டுமின்றி மணமக்களுக்கு சீர் வரிசை கொடுத்த ஒரே கட்சி அதிமுக தான் என்று பெருமிதத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
 

Similar News