சட்டமன்ற தேர்தல் எதிரொலி: 118 செலவின பார்வையாளர்கள் நாளை தமிழகம் வருகை.!
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல் 6ம் தேதி) நடைபெறுகிறது. இதனையொட்டி தேர்தல் வேலைகளை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல் 6ம் தேதி) நடைபெறுகிறது. இதனையொட்டி தேர்தல் வேலைகளை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது.
அரசியல் கட்சிகள் எவ்வாறு நடந்து கொள்வது மற்றும் கொரோனா காலகட்டத்தில் பிரச்சாரத்தை எவ்வாறு முன்னெடுப்பது உள்ளிட்ட ஆலோசனைகளை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. இதனிடையே வேட்புமனுத்தாக்கல் செய்யும் போதிலிருந்து வேட்பாளர்கள் செலவு செய்யும் கணக்கு அனைத்தையும் தேர்தல் ஆணையம் உன்னிப்பாக கவனித்து வரும்.
இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியதாவது: தேர்தல் செலவின பார்வையாளர்கள் 118 பேர் நாளை தமிழகம் வர உள்ளனர். இதுவரை தமிழகத்திற்கு 65 கம்பெனி துணை ராணுவப்படை வந்துள்ளது.
மேலும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு ஏதுவாக வாக்குச்சாவடிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.