தமிழகத்தில் ரூ.15.20 கோடி பணம், பரிசுப்பொருட்கள் பறிமுதல்: தேர்தல் அதிகாரி தகவல்.!
தமிழகத்தில் ஒரே கட்டமாக அடுத்த மாதம் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவித்த அடுத்த நிமிடம் முதல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது.
தமிழகத்தில் ஒரே கட்டமாக அடுத்த மாதம் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவித்த அடுத்த நிமிடம் முதல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது.
இதன் காரணமாக அனைத்து வாகனங்களும் தீவிர சோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகிறது. அது போன்ற சோதனை செய்யும்போது உரிய ஆவணம் இன்றி பணத்தை எடுத்து செல்கின்றவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக இதுவரை 15 கோடியே 20 லட்சம் ரூபாய் பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
இன்னும் தேர்தல் முடியும் முன்னர் பல கோடி ரூபாய் சிக்க வாய்ப்புள்ளது. இதனால் தேர்தல் அதிகாரிகள் இரவு, பகல் பாராமல் சோதனை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.