அ.தி.மு.க.வின் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்.. முதல் தீர்மானமே மு.க.ஸ்டாலினுக்கு கண்டனம்.!

அ.தி.மு.க.வின் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்.. முதல் தீர்மானமே மு.க.ஸ்டாலினுக்கு கண்டனம்.!

Update: 2021-01-09 12:57 GMT

அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன் மற்றும் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.க்கள் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் பல்வேறு சார்பு அணியில் உள்ள நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


இந்த கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

1) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்.

2) நாடு தழுவிய அளவில் சிறந்த நிர்வாகம் கொண்ட மாநிலமாக தமிழகத்தை முன்னேற்றிய முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம்.

3) நிவர், புரெவி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.600 கோடி நிவாரணம் வழங்கிய தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம்.

4) நகர்புற வீட்டு வசதித் திட்டத்தில் தமிழகத்தையும் சேர்த்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்.

5) உலக முதலீட்டாளர் மாநாடு நடத்திய தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம்.

6) இலங்கையில் மாகாண கவுன்சில் முறை ரத்து செய்யப்படுவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

7) தமிழகத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் என அறிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி

8) ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைத்து வரும் தமிழக அரசை பாராட்டி தீர்மானம்.

9) அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளதை பொதுக்குழு ஏற்கிறது.

10) கூட்டணி, தேர்தல் வியூகம், தொகுதிப் பங்கீடு குறித்த முடிவெடுக்க ஓபிஎஸ், இபிஎஸ்சுக்கு முழு அதிகாரம்.

11) பொதுக்குழு தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத முன்னுரிமை எனும் நெறிமுறையை முறைப்படுத்திய தமிழக அரசுக்கு அதிமுக பொதுக்குழு பாராட்டு

12) தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினிக்குகள் அமைத்துள்ள தமிழக அரசுக்கு அதிமுக பொதுக்குழு பாராட்டு.

13) தனியார் மருத்துவக்கல்லூரியில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்று இருப்பதற்கு பாராட்டு.

14) பொங்கல் பரிசுத் தொகையாக 2500 ரூபாய் வழங்கும் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம்.

15) கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றிய தமிழக அரசுக்கு அதிமுக பொதுக்குழு பாராட்டு.

16) தமிழ்நாட்டில் ஒரே குடும்பத்தின் ஏக போக, வாரிசு அரசியலை வீழ்த்துவது என அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 

Similar News