வேலூர்: 18வது வார்டில் வெற்றி அறிவிப்பு நிறுத்தி வைப்பு! தி.மு.க.வை கண்டித்து பா.ஜ.க. தர்ணா!

வேலூர் மாநகராட்சியில் 18வது வார்டில் வெற்றி அறிவிப்பை நிறுத்தி வைத்ததால் பாஜகவினர் தர்ணாவில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

Update: 2022-02-22 12:42 GMT

வேலூர் மாநகராட்சியில் 18வது வார்டில் வெற்றி அறிவிப்பை நிறுத்தி வைத்ததால் பாஜகவினர் தர்ணாவில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இறுதியை எட்டிய நிலையில், பல இடங்களில் திமுகவினருக்கு சாதகமாக்க அதிமுக, பாஜகவினர் வெற்றியை அதிகாரிகளை வைத்து ஆளும் அரசு துஷ்பிரயோகம் செய்து வருகிறது.  அதே போன்று வேலூர் மாநகராட்சி 18வது வார்டில் பாஜக வேட்பாளராக சுமதி போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுக கூட்டணியில் இடம்பெற்ற மதிமுக வேட்பாளர் மேகலா என்பவர் போட்டியிட்டார்.

Full View

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கைகள் முடிந்த பின்னர் பாஜகவினர் வாக்குகளை குறைத்ததாக கூறப்படுகிறது. இதனால் தங்களது வெற்றியை பறிக்கும் வகையில் செயல்பட்ட தேர்தல் அதிகாரிகளை கண்டித்து பாஜகவினர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். உடனடியாக மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என பாஜகவினர் கோஷங்களை எழுப்பி வருகின்றனர். ஆளும் கட்சியின் அத்துமீறலால் பல இடங்களில் வெற்றி பெறும் பாஜகவினர் தோல்வியை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Source, Image Courtesy: Puthiyathalaimurai

Tags:    

Similar News