2 நாட்களில் 2 லாக்கப் மரணம்: காவல் நிலையத்திற்கு சென்றால் உயிருடன் திரும்புவோமா என்ற அச்சம் - அண்ணாமலை சுளீர்!

Update: 2022-06-13 14:03 GMT

இரண்டு நாட்களில் இரண்டு லாக்கப் மரணங்கள் நேற்று ராஜசேகர், இன்று சிவசுப்பிரமணியன். காவல் நிலையத்திற்கு சென்றால் உயிருடன் திரும்புவோமா என்ற அச்சத்தை விதைத்திருப்பதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தி.மு.க. அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை, கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜசேகர் அழைத்து செல்லப்பட்டார். பின்னர் நகையை மீட்பதற்காக வெளியில் அழைத்து செல்லப்பட்டபோது அவர் மயங்கி விழுந்தார். இதனை தொடர்ந்து அவரை கொடுங்கையூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் மீண்டும் தமிழக மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்.ஐ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: இரண்டு நாட்களில், இரண்டு லாக்கப் மரணங்கள். நேற்று ராஜசேகர், இன்று சிவசுப்பிரமணியன்.

காவல் நிலையத்திற்குச் சென்றால் உயிருடன் திரும்புவோமா என்ற அச்சத்தை விதைத்துள்ளது முதல் அமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை.

கடந்த ஓராண்டில் ஏழு லாக்கப் மரணங்கள். காவல்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களுக்கு அமைக்கப்பட்ட ஆணையத்தின் நிலை என்ன?

தமிழகத்தில் அரசு இயங்குகிறதா??? இவ்வாறு அவரது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Twitter

Tags:    

Similar News