ஊழல் என்பது ஒரு தலைமுறையினரை அழித்துக் கொண்டிருக்கிறது - அண்ணாமலை
முதலமைச்சர் உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள் வரை அவர்களுடைய சொத்து பட்டியலில் வெளியிடுவேன் என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார்.
திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க சார்பில் கோவில் விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் கட்சி தொண்டர்கள் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. மதுவினால் குடும்ப தலைவர்கள் இழந்து குடும்பத்தினருக்கு நிதி உதவி மற்றும் மூன்று பள்ளிகளுக்கு மேஜை நாற்காலி வழங்கும் நிகழ்ச்சியை அண்ணாமலை தொடங்கி வைத்தார். குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழகத்தில் மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது ஊழல் தான் என்று சொல்வார்கள். ஊழல் என்பது ஒரு தலைமுறையினரை அழித்துக் கொண்டிருக்கிறது.
சமீபத்தில் தி.மு.க வினர் தான் நான் கட்டி இருக்கும் கைக்கடிகாரத்திற்கு பில் வேண்டும் என்றார்கள்.bநானும் கைக்கடிகாரத்திற்கான பில் கொடுப்பதற்கான தேதி, நேரம் குறிப்பிட்டு விட்டேன். கைக்கடிகாரத்தை எங்கிருந்து வாங்கினேன்? என்பது குறித்து முழு ஆதாரத்தையும் கொடுக்க இருக்கிறேன். கடிகார பில் மட்டுமல்லாது 13 ஆண்டுகளாக நான் ஒரு போலீஸ் அதிகாரியாக இருந்த சம்பாதித்த சொத்து அனைத்தையும் மக்களிடம் தெரிவிக்கிறேன்.
தி.மு.கவின் அமைச்சர்கள் மற்றும் உறவினர்களின் சொத்து பட்டியல் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவிக்கப்படும். அமைச்சர் மற்றும் அவருடைய குடும்பத்தினரின் சொத்து பட்டியல் வெளியிடப்படும், நமக்கு தெரிந்தவரை 2 லட்சம் கோடியை தாண்டிவிட்டது. முதலமைச்சர் மற்றும் தி.மு.க எம்.எல்.ஏ வரை ஒவ்வொருவருக்கும் தனித்தனி சொத்து வெளியிடப்படும் என்றும் கூறியிருக்கிறார்.குறிப்பாக அவர்கள் 150 ஏக்கர் நிலத்தை வடித்து போட்டு வருகிறார்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகள் இருந்தால் நீட் வேண்டாம் என்கிறார்கள். 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடிக்கு வாக்களிக்க செல்லும் பொழுது, மக்கள் இடம் கேட்கும் கேள்வி 2 லட்சம் கோடியா? பாரதிய ஜனதா கட்சியா? என்பதுதான் என்று அவர் கூறுகிறார்.
Input & Image courtesy: Maalaimalar