20 சதவீத இடஒதுக்கீடு.. அமைச்சர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட பா.ம.க.!

20 சதவீத இடஒதுக்கீடு.. அமைச்சர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட பா.ம.க.!

Update: 2021-02-03 13:56 GMT

20 சதவீத இடஒதுக்கீடு குறித்து சென்னையில் அமைச்சர்களுடன் பாமக குழு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளது. தமிழக அரசு பணிகளில் 20 சதவீத உள்ஒதுக்கீடு வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அதற்கு என்று மாவட்டம் தோறும் போராட்டங்களை முன்னெடுத்தார்.

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன், பாமக கூட்டணி வைக்க வேண்டும் என்றால் வன்னியர்களுக்கு 20 சதவீத உள்ஒதுக்கீட்டை அமல்படுத்தினால்தான் கூட்டணியில் நீடிப்போம் என கட்டாயமாக ராமதாஸ் கூறிவிட்டார்.

இந்நிலையில், வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது பற்றி அமைச்சர்கள் கொண்டு குழுவுடன் பாமக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இந்த பேச்சு வார்த்தையானது சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் தங்கமணியின் இல்லத்தில் நடைபெற்று வருகிறது. இதில் தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

அதே போன்று பாமக தரப்பில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, வழக்கறிஞர் பாலு உட்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டினால் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் பாமக தொடர்ந்து கூட்டணியில் நீடிக்கும் என்று தெரிகிறது.

Similar News