20 வருடங்களுக்கு பின் மீண்டும் கோட்டைக்கு செல்லும் தாமரை.!

தமிழக சட்டமன்ற தேர்தலில் 4 தொகுதிகளில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. கடந்த 20 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் தாமரை தமிழகத்தில் மலர்ந்துள்ளது.

Update: 2021-05-03 04:03 GMT

தமிழக சட்டமன்ற தேர்தலில் 4 தொகுதிகளில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. கடந்த 20 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் தாமரை தமிழகத்தில் மலர்ந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 1996ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், பாஜக ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. அதற்கு அடுத்து 2001ம் ஆண்டு திமுக கூட்டணியில் இடம் பெற்ற பாஜக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதன் பின் நடைபெற்ற தேர்தலில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கவில்லை.


 



இந்நிலையில், அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற பாஜக 20 இடங்களில் போட்டியிட்டது. அதில் நாகர்கோவில் தொகுதியில் எம்.ஆர்.காந்தி, கோவை தெற்கு தொகுதியில், வானதி சீனிவாசன், திருநெல்வேலி தொகுதியில் நயினார் நாகேந்திரன், மொடக்குறிச்சி தொகுதியில் சரஸ்வதி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் தாமரை மலராது என்று திமுகவை சேர்ந்தவர்கள் சொல்லி வந்த நிலையில், 4 தாமரைக்கள் சட்டமன்றதிற்குள் நுழைவது அவர்களுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே பல அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

Similar News