200ன்னு சொன்னது தொகுதிகள் கிடையாது.. உபிகளுக்கான தொகை.. ஸ்டாலினை கலாய்க்கும் கமல்.!

200ன்னு சொன்னது தொகுதிகள் கிடையாது.. உபிகளுக்கான தொகை.. ஸ்டாலினை கலாய்க்கும் கமல்.!

Update: 2020-12-22 12:31 GMT

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வருகின்ற தேர்தலில் 200 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்பது நமது குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று பேசினார். மிஷன் 200 என்பதை அனைவரும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், கமல்ஹாசனிடம் செய்தியாளர்கள் இது பற்றி கேட்டபோது, அவர்கள் 200 என்று கூறியது தொகுதிகளாக இருக்காது என்றும், அவர்கள் தங்களுடன் இருப்பவர்களுக்கு கொடுக்கும் தொகையாக இருக்கும் என கிண்டலுடன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே திமுகவுக்கு ஆதரவாக ட்விட்டரில் எழுதுபவர்களுக்கு ட்வீட் ஒன்றுக்கு 200 ரூபாய் கொடுக்கப்படுவதாக செய்திகள் பரவிக் கொண்டிருக்கும் நிலையில் அதை உறுதி செய்வது போன்று கமல் கிண்டலுடன் ஸ்டாலின் கூறிய 200க்கு அர்த்தம் கூறியது திமுக தொண்டர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் திமுக மற்றும் மக்கள்நீதி மய்யம் கட்சி கூட்டணி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் திமுகவை இந்த அளவுக்கு கிண்டல் செய்யும் கமல்ஹாசனுடன் இனி கூட்டணி இருக்குமா என்பது சந்தேகமே என்று பேசப்பட்டு வருகிறது.
 

Similar News