'2008-ஆம் ஆண்டிலேயே தனி மாநிலம் வேண்டும் என நான் கேட்டேன்' : சொல்வது தி.மு.க கூட்டணி எம்.எல்.ஏ!

Update: 2021-07-19 01:30 GMT

"2008'ம் ஆண்டில் இருந்தே கொங்கு மண்டலத்தை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என நான் பேசிக்கிட்டு இருக்கேன்" என தனியார் பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும், திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏ-வுமான ஈ.ஆர்.ஈஸ்வரன்.

இது தொடர்பான அவர் கூறியுள்ளது, "கொங்கு மண்டலத்துல நிறைய தொழிற்சாலைகள் இருக்கின்றன. கொங்கு மண்டல மக்களுடைய கடுமையான உழைப்பினால், அதிக வருமானம் ஈட்டும் மற்றும் அரசுக்கு அதிக வரி கட்டும் பகுதியாக கொங்கு பகுதி உள்ளது.

ஆனா, எந்த வசதிகளும் இந்த கொங்கு மண்டலத்திற்கு கிடைக்கிறதில்லை. ஈரோடு மாவட்டம், பெருந்துறைக்கு வரவேண்டிய எய்ம்ஸ் மருத்துவமனை மதுரைக்குப் போனது. அ.தி.மு.க., ஆட்சியில் பல மாவட்டங்களைப் பிரிச்சப்போ, கொங்கு மண்டலத்துல இருந்த பொள்ளாச்சி, கோபிசெட்டிபாளையம் மற்றும் திருச்செங்கோட்டை பிரிக்கவே இல்லை. இதனால 'கொங்கு மண்டலம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது' என நான் கடுமையாக எதிர்த்தேன்.

தொடர்ந்து இந்தப் புறக்கணிப்பு நடக்குமேயானால், எங்கள் வருமானத்தை நாங்களே பயன்படுத்திக்கிறோம். தனி மாநிலம் கேக்குறதைத் தவிர எங்களுக்கு வேற வழி கிடையாது என பேசியிருக்கேன். 2008-ல இருந்து கொங்கு மண்டலத்தை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என நான் பேசிக்கிட்டு இருக்கேன். ஏன், 'புரட்சி கொங்கு நாடு படைக்கணும்' என கொங்கு நாட்டிற்கென ஒரு தனி பிரச்சார பாடலைக் கூட நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். வளர்ச்சி மற்றும் நிர்வாக வசதிகளுக்காக பெரிய மாநிலங்களை சிறு மாநிலங்களாகப் பிரிப்பதில் தவறு கிடையாது" என தெரிவித்துள்ளார் எம்.எல்.ஏ ஈஸ்வரன்.

Soure - ஜூனியர் விகடன்.

Similar News