2019'ம் ஆண்டிலிருந்து இதுவரை 9 கோடிக்கும் அதிகமான குடிநீர் குழாய் இணைப்புகள் - ஜல் சக்தி திட்டத்தில் கலக்கும் மோடி அரசு
2021-22 நிதியாண்டில், ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ், வீட்டுக் குழாய் நீர் இணைப்புகளை வழங்குதல் மற்றும் கிடைக்கக்கூடிய மத்திய மானியத்தைப் பயன்படுத்துதல் ஆகியவற்றின் அடிப்படையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு ரூ.40,000 கோடி ரூபாய் மானியம் விடுவித்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் 2022-23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் ரூ.60,000 கோடியாக மத்திய அரசால் உயர்த்தப்பட்டுள்ளதாக ஜல் சக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் COVID-19 தொற்றுநோய் மற்றும் அதன் விளைவாக லாக்டவுன், திட்டங்களை தொடருவதில் சிக்கல்கள் இருந்தபோதிலும், ஜல் ஜீவன் மிஷனை செயல்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், 22'ம் நிதியாண்டில் 2.06 கோடிக்கும் அதிகமான கிராமப்புற குடும்பங்களுக்கு குழாய் நீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜல் சக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தற்போது, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், தாதர் மற்றும் நாகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் தெலுங்கானா, கோவா, ஹரியானா, புதுச்சேரி மற்றும் தெலுங்கானா ஆகியவை 'ஹர் கர் ஜல்' மாநிலங்களாகவும், யூனியன் பிரதேசங்களாகவும் மாறியுள்ளன, மேலும் நாட்டின் 106 மாவட்டங்கள் மற்றும் 1.45 லட்சம் கிராமங்களில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் குடிநீர் குழாய் இணைப்புகளை கொண்டுள்ளன என்றும் ஜல் சக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
"ஜல் ஜீவன் மிஷன் 15 ஆகஸ்ட், 2019 அன்று அறிவிக்கப்பட்டதிலிருந்து, இதுவரை 6 கோடிக்கும் அதிகமான வீடுகளுக்கு குழாய் நீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன, இதனால் குழாய் நீர் விநியோகம் 3.23 கோடியிலிருந்து 9.35 கோடிக்கு அதிகரித்துள்ளது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டுக்குள் 6 லட்சம் கிராமங்கள் அனைத்தும் "ஹர் கர் ஜல்" ஆக மாறுவதை உறுதிசெய்ய, ஒவ்வொரு கிராமப்புற வீடுகளுக்கும் சுத்தமான குடிநீரை வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த 'வேகமும் அளவும்' தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று ஜல் சக்தி துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.