2021'ம் ஆண்டில் 80 கோடி நிதி வருவாய் ஈட்டிய தி.மு.க - தனியார் நிறுவனங்கள் கோடி கோடியாக இறைத்துள்ளன

Update: 2022-01-20 12:45 GMT

கடந்த 2021'ம் ஆண்டில் 80 கோடி ரூபாய் தேர்தல் நிதிப்பத்திரங்கள் மூலம் வருவாயாக சம்பாதித்துள்ளது.


பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதி திரட்டும் முறையை அறிமுகம் செய்தபோது வழக்கம்போல் தி.மு.க எகிறி குதித்தது 'இது கூடாது, இதனால் என்ன ஆகிவிடப் போகிறது' என வழக்கம்போல் எல்லாவற்றையும் அரசியல் காரணங்களுக்காக எதிர்ப்பது போல் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டுவதையும் எதிர்த்து வந்தது. இந்நிலையில் கடந்த முறை எந்த தேர்தல் பத்திரங்களை தி.மு.க எதிர்த்ததோ அதே முறையில் கடந்த 2021'ம் ஆண்டு 80 கோடி ரூபாய் மூலம் வருவாயை ஈட்டியுள்ளது தி.மு.க.

இதில் பல நிறுவனங்கள் தி.மு.க'விற்கு பணம் அளித்துள்ளன, SNJ சுகர்ஸ் அண்ட் புராடக்ட்ஸ் நிறுவனம் மட்டுமே கட்சிக்கு 6 கோடி ரூபாய் நன்கொடையாக அளித்துள்ளது. குறிப்பாக கட்சி உறுப்பினர்களிடம் இருந்து தலைக்கு 2 ரூபாய் வீதம் பெறப்பட்டதாக 11 லட்சம் கணக்கில் காட்டப்பட்டுள்ளது, அப்படி எனில் தி.மு.க உறுப்பினர்கள் 6 லட்சம் பேர் அளவில் கூட இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இதில் குறிப்பிடதக்க விஷயர் என்னவென்றால் தி.மு.க'வின் தற்பொழுதைய நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கடந்த 2017'ம் ஆண்டு கூறியது, "சட்டப் பணப் பரிமாற்றத்தில் பாஜக ஈடுபடுவதற்கு தேர்தல் பத்திரங்கள் ஒரு வழியாகும்" என்றார். ஆனால் அந்த சமயம் குறை கூறிவிட்டு தற்பொழுது அதே முறை மூலம் 80 கோடி நிதி தி.மு.க திரட்டியது குறிப்பிடதக்கது.


Source - The Commune

Similar News