கும்பகோணத்தில் இன்று ஜூலை 10 குரு பூர்ணிமாவை முன்னிட்டு நடந்த ஸ்ரீ சக்கர தீர்த்த சுவாமிகள் கும்பகோணம் ஸ்ரீ சந்த்ரசேகர பவனத்தில் வ்யாச பூஜையில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கோவில் காவலாளியாக இருந்த அஜித்குமாரின் மரணத்தை தொடர்புடைய நிகிதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இதில் ஐஏஎஸ் அதிகாரிக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது அதனால் அதைப் பற்றியும் விசாரிக்க பாஜக வழக்கறிஞர்கள் பிரிவு சார்பில் சிபிஐயிடம் மனு அளிக்கப்படும் என கூறியுள்ளார்
மேலும் பேசியவர் அறநிலையத்துறை இடமிருந்து இந்து கோவில்களை காப்பாற்ற வேண்டும் 2026 இல் இந்த பிரச்சாரத்தை பாஜக முன்னெடுக்கும் என தெரிவித்துள்ளார்