2034 தேர்தலில் ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்தப்படும்,தந்தை வழியை எதிர்க்கும் தமிழக முதல்வர்:நிர்மலா சீதாராமன்!

செங்கல்பட்டில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2034 ஆம் ஆண்டு நடக்கும் லோக்சபா பொது தேர்தலின் போது ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என கூறியுள்ளார்

அதாவது 2029 ஆம் ஆண்டு நடைபெற உள்ள பார்லிமென்ட் தேர்தலுக்குப் பிறகுதான் ஜனாதிபதி ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான பணிகளை தொடங்குவார் என்றும் முழு விவரம் இது குறித்து தெரியாதவர்களுக்கு நாம் இதனை சொல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளார் மேலும் இந்த பரிந்துரையின் மூலமாக தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் கிடைப்பதோடு ஒரு நிரந்தர கட்டமைப்பு உருவாகும் 2029 ஆம் ஆண்டில் ஒரே நாடு ஒரே தேர்தல் முறைகளுக்கான பணிகளை தொடங்கினால் 2034 ஆம் ஆண்டு நடக்கும் பொது தேர்தலின் போது செயல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்
தொடர்ந்து பேசிய நிர்மலா சீதாராமன் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு ஆதரவு கொடுத்தார் அதனை தனது சுயசரிதையிலும் குறிப்பிட்டுள்ளார் ஆனால் இன்றுள்ள முதல்வரும் கருணாநிதி அவர்களின் புதல்வனான ஸ்டாலின் தந்தை சொன்ன வழியில் போகாமல் எதிர்ப்பேன் என்று எதிர்க்கிறார் அரசியல் ஆதாயத்திற்காக எதிர்ப்பேன் என எதிர்க்கின்றனர் என்று கூறியுள்ளார்