அமைச்சர் பொன்முடி மீதான 26 கோடி ரூபாய் செம்மண் குவாரி வழக்கு - விடுவிக்க முடியாது என அமைச்சர் பொன்முடிக்கு நீதிமன்றம் வைத்த குட்டு

சட்டவிரோதமாக செம்மண் எடுத்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய வழக்கில் அமைச்சர் பொன்முடி தரப்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-11-12 13:02 GMT

சட்டவிரோதமாக செம்மண் எடுத்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய வழக்கில் அமைச்சர் பொன்முடி தரப்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்ட விரோதமாக செம்மண் எடுத்து அரசு இழப்பு ஏற்படுத்தியதற்கு உடந்தையாக இருந்ததாக பதிவான வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2006-11ஆம் ஆண்டு காலத்தில் தி.மு.க ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்முடியின் மகன் கௌதம சிகாமணி மற்றும் உறவினர்கள் செம்மண் குவாரிகளில் அதிக அளவு செம்மண் எடுத்ததாக புகார் அளித்தது.

இதன் மூலம் அரசுக்கு 28 கோடியே 37 லட்சத்து 65 ஆயிரத்து 600 ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணையில் உள்ளது இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என பொன்முடி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சிறப்பு நீதிமன்றம் உத்தரப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் காவல்துறையை தரப்பில் தகவல் செய்யப்பட்ட ஆவணங்கள் சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்து மனுதாரருக்கு எதிராக வழக்கை தொடர்ந்து நடத்த போதுமான ஆவணங்கள் உள்ளதாக கூறி அமைச்சர் பொன்முடியின் மனுவை தள்ளுபடி செய்த உத்தரவிட்டார்.



Source - The Tamil Hindu

Similar News