அனைவரையும் மீட்கும் வரை நமது பிரதமர் ஓயமாட்டார்!
உக்ரைனில் இருந்து சென்னை வந்த 26 தமிழக மாணவர்களை பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் கர்நாடக மாநில அமைச்சர் சி.டி.ரவி வரவேற்றனர்.
உக்ரைனில் இருந்து சென்னை வந்த 26 தமிழக மாணவர்களை பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் கர்நாடக மாநில அமைச்சர் சி.டி.ரவி வரவேற்றனர். உக்ரைன் மீது ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதலால் அங்குள்ள இந்தியர்களை பாதுகாப்பாக மத்திய அரசு மீட்டு வருகிறது. அதற்காக 4 மத்திய அமைச்சர்களை பிரதமர் மோடி நியமித்துள்ளார். அவர்கள் உக்ரைன் அண்டை நாடுகளில் முகாமிட்டு இந்தியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
26 students from Ukraine & native of Tamil Nadu arrived in Chennai today. Received them along with @BJP4India National Gen Sec Shri @CTRavi_BJP avl
— K.Annamalai (@annamalai_k) March 2, 2022
Their's been a long journey & our Hon PM Shri @narendramodi avl had been with them in their every single step@VMBJP @Murugan_MoS pic.twitter.com/1fipDFyMtJ
இந்நிலையில், உக்ரைனில் இருந்து சிறப்பு விமானம் மூலம் இந்தியர்கள் திரும்பினர். அதில் 26 தமிழக மாணவ, மாணவிகள் சென்னைக்கு இன்று வருகை புரிந்தனர். அவர்களை தமிழக பாஜக தலைவர் விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார். அவர்களிடம் நலம் விசாரித்தார். அவருடன் கர்நாடக மாநில அமைச்சர் சி.டி.ரவி மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், உக்ரைனில் இருந்து தமிழகத்தைச் சேர்ந்த 26 மாணவர்கள் இன்று சென்னைக்கு வருகை புரிந்தனர். அவர்களை சி.டி.ரவியுடன் சென்று வரவேற்றோம். மேலும், ஒவ்வொரு மாணவர்களும் இந்தியா கொண்டுவரப்படும் வரை பிரதமர் மோடி ஓய மாட்டார். இவ்வாறு அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Source, Image Courtesy: Twiter