வெளியாகவிருக்கும் திமுகவின் புதிய அமைச்சரவை பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன.
கடந்த சில மாதங்களாகவே திமுக அரசின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் அதிக விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றன. குறிப்பாக கூற வேண்டும் என்றால் அமைச்சர்கள் பொதுவெளியில் மக்களிடம் பேசும், நடந்து கொள்ளும் முறைகள் அனைத்தும் திமுக அரசுக்கு பின்னடைவை தான் ஏற்படுத்தி உள்ளன. அமைச்சர்கள் கே என்.நேரு, பொன்முடி, துரைமுருகன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் போன்ற அனைவரும் மக்கள் மத்தியிலும் நடந்து கொள்ளும் விதம் அவ்வபோது திமுக மீதான அதிருப்தி அதிகமாக காரணமாக அமைந்துவிட்டன.
இது எல்லாவற்றிற்கும் மேலாக நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் திமுகவை விமர்சித்தது திமுகவை வாழ்நாள் சிக்கலில் இழுத்து மாட்டி விட்டுள்ளது. இவை எல்லாவற்றையும் நாம் சகித்துக் கொண்டிருந்தால் நமக்கு இதற்கு மேலும் அரசியல் அடி ஏற்படும் எனவே இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் இல்லாவிட்டால் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது கடினமாகிவிடும் அதைவிட 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது மிகவும் கடினமாகிவிடும் என பல்வேறு அரசியல் கணக்குகளை போட்டு வந்த திமுக தலைமை தற்பொழுது அமைச்சரவை மாற்றத்திற்கு தயாராகியுள்ளது.
அந்த வகையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அமைச்சரவை கூட்டத்தை கூட்டினார் முதல்வர் ஸ்டாலின் அதில் முக்கியமான சில விவகாரங்கள் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த விவகாரத்தில் அமைச்சரவை மாற்றமும் இருக்கும் என தகவல்கள் கிடைத்துள்ளன, அமைச்சரவை மாற்றத்தில் யார் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்! யார் யாருக்கு வாய்ப்பு கிடைக்காது! என்றெல்லாம் சில தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த உறுதி செய்யப்படாத தகவல்களை அறிவாலய வட்டாரத்தில் விசாரித்த பொழுது சில அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்படலாம் என தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தீவிர ஆலோசனையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.