3 மாதத்தில் கரூர் மேயர் சிறை செல்வது உறுதி! பாதயாத்திரையில் அண்ணாமலை!

Update: 2023-11-05 02:37 GMT

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையால் மேற்கொள்ளப்பட்டு வரும் என் மண் என் மக்கள் நடை பயணம் என்று கரூர் தொகுதிக்குட்பட்ட திருமாநிலையூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மக்களுடன் நடந்து சென்று அவர்களின் குறைகளை கேட்டுக் கொண்ட மாநில தலைவர் அண்ணாமலை தாந்தோணி மலையில் திறந்த வாகனத்தில் நின்றபடி மக்களிடம் உரையாற்றினார்.

அப்பொழுது, ஜனாதிபதியாக கரூர் மாநகராட்சி மேயர் தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறார் என்றும் அவர் செய்கின்ற தவறுகளை நாமும் செய்யக்கூடாது, நீட்டிற்கு எதிராக திமுகவினர் கரூர் முழுவதும் போஸ்டர்களை ஓட்டுகிறார்கள் தமிழக முழுவதும் இருக்கும் பள்ளி குழந்தைகளிடமும் திமுக எம்எல்ஏக்கள் உரையாடி நீட்டிற்கு எதிராக கையெழுத்துக்களை வாங்குகிறார்கள். நீட் தேர்வு என்றால் என்ன என்பதை நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களிடம் உதயநிதி ஸ்டாலின் கேட்டறிந்து கொள்ள வேண்டும்.

அமைச்சர் எ.வ. வேலு அரசியலுக்கு வருவதற்கு என்ன வேலை செய்தார் ஆனால் திமுக ஆட்சி அமைத்த 30 மாதங்களில் இரண்டு மருத்துவ கல்லூரிகளை தன்வசமாக்கி விட்டார். கரூரில் செந்தில் பாலாஜியின் வீட்டை வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை இட சென்ற பொழுது அதிகாரிகளை தாக்கிய முதல் ஆளாக கரூர் மேயர் தான் இருந்தார். இது குறித்த வழக்கும் சிபிஐ யிடம் உள்ளது. அதனால் இன்னும் மூன்று மாதத்தில் கரூர் மேயர் சிறைக்கு செல்வது உறுதி! எனவே அதுவரையும் பாஜகவினரின் பிளக்ஸ் பேனர்களை அகற்றிக் கொண்டு கொஞ்சம் சந்தோஷபட்டு கொள்ளடும் என தெரிவித்தார். 

Source : abp nadu

Similar News