30 வருடங்களுக்கு பிறகு சரிந்த முலாயம், அகிலேஷ் யாதவ் கோட்டை - உத்திர பிரதேச தேர்தலில் பா.ஜ.க அபார வெற்றி!

Update: 2021-07-04 05:44 GMT

உத்தர பிரதேசத்தில் கடந்த மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. வாக்குச்சீட்டு பயன்படுத்தப்பட்ட இத்தேர்தலின் முடிவுகள் நேற்று எண்ணப்பட்டன. இத்தேர்தலில் போட்டியிடாமல் பகுஜன் சமாஜ் கட்சி வெளியேறிய நிலையில் எதிர்கட்சியான அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை முடிவில் பா.ஜ.க அபார வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 75 மாவட்ட பஞ்சாயத்துகளில் 67 மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிகளை பாரதிய ஜனதா கட்சி கைப்பற்றியுள்ளது.

இதில் முக்கியமாக முலாயம் சிங் யாதவ் எம்.பி-யாக இருக்கும் மைன்பூரி பஞ்சாயத்தில் 30 வருடங்களில் முதன்முறையாக சமாஜ்வாதி கட்சி தோற்றுள்ளது. இந்த இடத்தில் முதன்முறையாக பா.ஜ.க அபார வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.க-வின் அர்ச்சனா படூரியா இங்கு வெற்றி வாகை சூடியுள்ளார்.

இதேபோல, சமாஜ்வாதி கட்சியின் கோட்டைகளாக கருதப்படும் கண்ணூஞ், பிரோசாபாத் பகுதிகளிலும் பா.ஜ.க அபார வெற்றி பெற்றுள்ளது. சமாஜ்வாதி கட்சி எம்.பி-க்கள் இருக்கும் பகுதிகளான ராம்பூர், சம்பால், மொராதாபாத் பகுதிகளிலும் அக்கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளத், இவ்விடங்களில் பா.ஜ.க அபார வெற்றி பெற்றுள்ளது.

அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் உத்திர பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பா.ஜ.க வெற்றி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Similar News